பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 மலரும் நினைவுகள் மும் தேவையா என்றுகூட நாம் வள்ளுவரைப் பார்த்து அனுதாபப்படுகின்றோம்’ என்று ஒரு போடு போட்டார். தொடர்ந்து கூறுவார் : ஆனால் வள்ளுவர் மெய் யுணர்வு பெற்ற ஞானி. கட்டுப்பாட்டின் மூலந்தான் மனிதன் உண்மையான வல்லமையைப் பெறலாம் என்று நமக்குத் தெரிவித்தவர். சொல்லினால் செய்த தவம், அவருக்கு மாத்திரமன்று, தமிழ் மொழிக்கே என்று. மில்லாத சொல்லாட்சித் தன்மையைக் கொடுத்து விட்டது. கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு (குறள்-269)’’ என்று, வள்ளுவரின் சொல்லாட்சியைப் பற்றி ஜஸ்டிஸ் மகராஜன் மேலும் கூறுவது நம்மைத் திகைக்க வைக்கின்றது. வள்ளுவர் என்ன செய்தார்? தமிழுக்கு, அற்புதமான குரலைக் கொடுத்தார். தமிழுக்கு நடை பழக் கினார்; தமிழ்ச் சொல்லுக்குத் தெளிவும், ஒளியும் கொடுத்தார். வேகமும் பொருள் வலிமையும் தந்தார். மின்சாரக் கம்பி இவ்வளவு லோட் (Load) தான் தாங்கும் என்ற கணக்குண்டு; தமிழ்ச் சொல்லுக்கு இவ்வளவு பாரம் தாங்கலாம், இவ்வளவு வேகந்தான் ஏற்றுக் கொள்ளலாம் என்ற ஒரு வரம்பும் உண்டு' என்று விளக்குவார். தொடர்ந்து, சாதாரணமாக, நாம் தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தும்போது கால் வேகம், அரைக் கால் வேகம்தான் கொடுக்க முடியும். கம்பனைப் போன்ற பெருங் கவிஞர்கள் முழு வேகத்தோடு பேசும்படிச் செய்வார்கள். ஆனால், வள்ளுவர் கையிலே ஒன்றேகால் வேகத்தோடு தமிழ்ச் சொல் பேசுகின்றது; ஏது, பொருள் சுமை பொறுக்க மாட்டாமல், சொல்லின் இடை நொடிந்து விடுமோ, சொல் சப்பழிந்து போகுமோ,