பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜஸ்டிஸ் டாக்டர் எஸ். மகராஜன் 407 மூச்சு விட்டுவிடுமோ என்ற பயம் ஒவ்வொரு குறளையும் படிக்கும்போதும் நமக்கு ஏற்படுகின்றது. அவ்வளவு அசாதாரணமான , அமானுஷ்யமான சொல்லாட்சித் திறமை அவரிடத்திலிருக்கின்றது என்பார். இதனை விளக்குவதற்கு எடுத்துக் காட்டும் தருவார். 'வைர வியாபாரி, வைரத்தை நவநவமான கோணங்களி லிருந்து பார்ப்பான்; உருப்பெருக்கியை (Magnifying 1ems) வைத்துப் பார்ப்பான்; எந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், டால் அதிகமாக அடிக்கும், எந்தக் கட்டுமானம் கொடுத்தால் அதன் முழு ஒளியையும் வெளிப் படுத்தலாம் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்வான். அதே முறையில் தமிழ்ச் சொல்லை ஆராய்ச்சி செய்தவர் வள்ளுவர். அவருடைய சாந்நித்தியத்திலே, கட்டுக் கடங்காது, திமிறி அலைந்த சொற்களெல்லாம், பயபக்தி யோடு கைகட்டி, வாய்புதைத்து, தலை குனிந்து அவருடைய ஏவலாட்களாகப் பணிபுரிந்தன' என்று கூறுவார். மேலும் பேசுவார்: இந்தச் சாதனையை அவர் எவ்வாறு கற்றுக் கொண்டார்? ஒவ்வொரு சொல்லுக்கும் ஓர் எல்லை கட்டி, அதன் அதிகாரம் இவ்வளவுதான் என்று முடிவு கட்டினார்: சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து (குறள்-645) கருத்தைச் சொல்மூலமாக வெளியிடுவதற்கு முன்னால், என்ன செய்ய வேண்டுமாம்? அந்தக் கருத்தைச் சொல்லத் தெரிந்த, கிட்டத்தட்ட ஒத்த பொருள் உள்ள சொற்கள் எல்லாம் நம் மனத்தகத்தே வந்து அணிவகுத்து நிற்க வேண்டும். நினைத்ததை நினைத்தபடி சொல்ல ஏலாத சொற்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும். எஞ்சி நிற்கின்ற சொற்களை ஒன்றோ