பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.08 மலரும் நினைவுகள் டொன்று மோதவிட்டு, எது இதர சொற்களை வென்று வெற்றி பெறுகின்றதோ அந்தச் சொல்லைத்தான் சொல்லவேண்டும் என்கின்றார்' என்று. இன்னும் கூறுவார்: " சிந்தனைக்கும் சொல்லுக்கும் நெருங்கிய உறவு உண்டு. சிந்தனை, சொல்லைப் பாதிப்பதுபோல், சொல் சிந்தையைப் பாதிக்கின்றது. இந்த மர்மத்தை உணர்ந்த வள்ளுவர், கல்லை வணங்கு வதற்குப் பதில், சொல்லையே வணங்கலாம் என்று ஒரு புது சமயத்தையே நிலைநாட்டுகின்றார். திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினுTஉங் கில். (குறள்-644) என்பது குறள். புருஷ தர்மம் என்றால் ஒன்றுதான் உள்ளது. புருஷ லட்சியமும் ஒன்றே ஒன்றுதான். சொல்லைத் திறனறிந்து சொல்லவேண்டும்; இதை மாத்திரம் கற்றுக் கொண்டால், வேறு தர்மத்தைப் பற்றியோ, லட்சியத்தைப் பற்றியோ மனிதன் கவலைப் பட வேண்டுவதேயில்லை என்று சொல்வார். சொல்லிலே தெளிவு ஏற்பட்டால், மனத்திலே தெளிவு ஏற்படும்: மனத்திலே தெளிவு இருந்தால் நடத்தையிலே தெளிவு இருக்கும்; ஆகவே திறனறிந்து சொல்லுக சொல்லை’’ என்பதாக. இங்ங்னம் விளக்கம் தந்து கொண்டேபோவார் ஜஸ்டிஸ் மகராஜன். நினைவு-3 : கம்பனில் தம்மைப் பறிகொடுத்திருந்த திரு. மகராஜன் அவர்கள் அவன் நாடக உத்தியைக் கையாண்டிருப்பதைத் தனிமையிலும் அற்புதமாகக் காட்டுவார். சொற்பொழிவிலும் காட்டுவார். நான் காரைக்குடியிலிருந்தபோது திரு. மகராஜன் சொற் பொழிவிலும், தனியாக உரையாடும்போதும் இந்த நாடக உத்தியை நன்கு அநுபவித்திருக்கின்றேன். எத்தனையோ இடங்களில் இதனைக் காட்டி நம்மை நாடக அரங்கிற்கே கொண்டு போய்விடுவார். ஒரு