பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 ஆனால் இறையருளால் துணிவு மிக்க என் அன்னை பல இன்னல்கட்கும் இடையில் சிறிதும் தளராது 'அம்மையாக இருந்து என்னை வளர்த்து அப்பனாக” இருந்து கல்வி பயிற்றுவித்து, அம்மையும் அப்பனுமாக’ இருந்து எனக்கு எல்லா நலன்களையும் அருளியதால் என் உயர் கல்வி ஒரளவில் வெற்றியுடன் நிறைவு பெற்றது. இறையருளால் அவர்கள் என் நாற்பத்து மூன்று அகவை வரை உயிரோடு இருந்து என் வளர்ச்சியையும் ஈட்டிவரும் நற்பெயரையும் கண்டு மகிழ்ந்தார்கள். அப்போது நான் காரைக்குடி அழகப்பர் ஆசிரியர் கல்லூரியில் பேராசிரிய னாகப் பணி புரிந்து வந்த காலம். ஏழாண்டுகள் கடுமை யாக உழைத்து தமிழ் பயிற்றும் முறை என்ற பெரு நூலை எழுதி வெளியிட்ட நிலை (அக்டோபர்-1957). இன்றும் பெருஞ்செல்வாக்குடன் புழக்கத்தில் இருந்து வரும் இந் நூலை - அவர்தம் பொன்னார் திருவடிகளில், நற்றவத் தாயே! வாழி! பல் லாண்டு நலனுறப் பெற்றெனை வளர்த்துக் கற்றவ னாக்கிப் பேணினை உலகிற் காணுறு பொருளெலாம் கொணர்ந்துன் சிற்றடிப் புறத்தில் வைப்பினும் அவை நின் சீரருட் கொப்பென லாமோ? மற்றிதை உணர்வேன்! எனினுமிந்நூல்நின் மலர்ப்பதத் துரிமை செய் தனனே. என்ற பாடலால் அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். தாய்மொழியைச் சிறார்களிடமும் வளர்ந்தவர்களிடமும் வளமாக வளர்க்கும் வழியைக் கூறும். தமிழ் பயிற்றும் முறை யாம் இந்நூலைத் தாய்க்கு அன்புப் படையலாக்கு வது பொருத்தமன்றோ? 1959-ஆம் ஆண்டு சனவரித்திங்க வரில் என் அன்னையார், ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன். எனக்கேட்ட தாய் (குறள்-69) என்ற வாக்கின் பொருளைக் கேட்ட நிலையில் திருநாடு அலங்கரித்துவிட்டார்கள்.