பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2414 மலரும் நினைவுகள் வெற்றிலை முதலியவற்றை மெல்லும் பழக்கத்தை கைவிட முயன்ற அநுபவத்தைச் சொல்ல ஆரம்பித்து விட்டார். 'புகையிலைக்கு அடிமையாயிருந்த நிலையினின்றும் விடுதலையடைய ஒரு சமயம் முயன்றேன். வாழ்க்கை யிலே கிடைக்கும் இன்பங்களோ ஒரு சில: அவற்றையும் வேண்டா என ஒதுக்கித் தள்ளுவானேன்? புகையிலைக்குக் கட்டுப்பட்டிருப்பது நாக்கு தானே, ஆன்மா இல்லையே’ என்று மனதைத் தேற்றிக் கொள்வதுண்டு. ஆனால் ஊன்றிப் பார்க்கும்போது இது வெறும் சோம்பேறியின் சித்தாந்தம் என்பது தெளிவாகும். வைராக்கியம் இல்லாத கோழைநீ என்று என் மனச்சான்று என்னை இடித்து ஏளனம் செய்யும். புலன் இன்பத்தில் ஈடுபட்ட என் அறிவோ புகையிலை போடுவதால் என்ன பாதகம்?" என்று சொல்லி என் கண்ணைத் துடைக்கும். எட்டாப் பழத்திற்குக் கொட்டாவி விடுவதைக் காட்டிலும், எட்டினாலும் பழம் புளிக்கத் தானே செய்யும் என்று மனத்தை ஏமாற்றிக் கொள்வது மனித இயல்பு. ஏமாற்றத்தின் மூலம் திருப்தி அடைவது எளிது. ஆனால் அந்தத் திருப்தி எவ்வளவு ஏளனத்துக் குரியது: மனிதப் பண்புக்கே உலை வைப்பது இந்தத் திருப்திதான். ஆன்மா வின் கண்ணியத்தை அவமானப்படுத்துவதும் இதுதான்' என்று சொல்லி தத்துவ சிந்தனைக்கு இழுத்துச் சென்று விடுவார். உடனே இப்பழக்கத்தினின்றும் விடுதலை அடைய முயன்ற கதையையும் அந்தப் போலி வைராக்கியம் தன்னை ஏமாற்றிவிட்ட கதையையும் சொல்லத்தொடங்கி விட்டார். என்னுடைய ஆண்மையைச் சோதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் புகையிலையின் கொட்டத்தை ஒடுக்க வேண்டும் என்ற ஆத்திரத்தோடும், புகையிலைப் பழக்கத்தை நிறுத்தினேன் ஒரு மூன்று நாள்.