பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜஸ்டிஸ் டாக்டர் எஸ். மகராஜன் 415 எழுபத்திரண்டு மணி நேரமாகப் புகையிலையின் உதவி யின்றி என் வாழ்க்கை ஓடியது!ஆனாலும், அப்பப்பா! என்ன வாழ்க்கை அது- பித்துப் பிடித்த வாழ்க்கை!" என்று ஒரு பெருமூச்சு விட்டார். தொடர்ந்து, புகையிலை இல்லாமல், அறிவே மறைந்து விட்டது போலத் தோன்றியது. புகையிலைக்கு அடிமைப்பட்டிருந்த காலத்திலாவது அதனைப் பயன்படுத்திக் கொண்டிருப் பேனேயொழிய, அதைப் பற்றி ஒரு மணித்துளியாவது சிந்தனை செய்ததில்லை. பழக்கத்தை விட்ட பிறகோ சதா புகையிலைப் பற்றியசிந்தனையும் தியானமும்தான்' என்று மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டார். தொடர்ந்து பேசுகின்றார் : என்ன செய்வது? உள்ளம் வேறு வேலையில் ஈடுபட மறுத்து விட்டது. நாக்கு *சிவபுரியை நினைந்து தவம் செய்து கிடக்கவே ஆரம்பித்து விட்டது. பல்லும் எயிறும் திமிர் கொண்டு தம் வசம் இழிந்தன; மூக்கும் கண்ணும் அநுதாபத்தோடு இயங்கின. ஐம்புலன்களும் ஆமை போல் அடங்கி, ஒருமைப்பட்டு, புகையிலையோடு பின்னிக்கிடந்து மயங் கின. என் ஆண்மையும் செயலும் மாண்டன. "மகாபாத கத்தைச் செய்து விட்டோம் என்று உணர்ச்சியோடு வெற்றிலையையும் புகையிலையையும் மறுபடியும் போட்டுக் கொண்டு தப்பினேன். அரை நாழிகைக்கு முன்னால், உடனே, என் ஐம்புலன்களிலும் படிந்து, சுற்றி யிருந்த இருண்ட மேகங்கள் கலைந்தன. மறைந்திருந்த அறிவு திரும்பவும் உதயமாயிற்று. புகையிலையைப் பற்றிய தியானத்திலிருந்து என் மனம் விடுதலையடைந் தது' என்று சொல்லி சிறையிருந்த கைதி விடுதலை அடையும்போது அடையும் மகிழ்ச்சியுடன் காணப் பட்டார். இப்போது நம்மாழ்வார் இந்திரியங்களால் துன்பப் பட்ட கதையைக் கூறும் திருவாய்மொழிப்பதிகம் (7.1) என் நினைவிற்கு வந்தது.