பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 6 மலரும் நினைவுகள் உள்நி லாவிய ஐவ ரால்குமை தீற்றி என்னையுன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணு கின்றாய்! (1) என்று ஆழ்வார் இறைவனை நோக்கி முறையிடுவது நினை விற்கு வந்தது. மேலும், விண்ணு ளார்பெரு மாற்க டிமைசெய் வாரை யும்செறும் ஐம்பு லணிவை மண்ணுள் என்னைப் பெற்றால் என்செய் யாமற்று நீயும்விட்டால் (6) என்று புலன்களின் வலிமையைப் பேசும் திருவாய்மொழிப் பாசுரமும் என் மனத்தில் குமிழியிட்டது. ஆனால், மிக்க நாணத்துடன் பேச்சைத் தொடர் கின்றார். சொல்ல முடியாத வெட்கமும், சோகமும் என்னைப் பற்றிக் கொண்டன. வைராக்கியத்தைக் காப்பாற்ற முடியவில்லையே என்று நினைக்குமபோது அவமானம் ஏற்படுகின்றது, இதுதான் பூவுலகில் மனித நாடகத்தில் நாம் நாள்தோறும் காணும் அவலக்காட்சி. மனித-ஆன்மா விண்மீன் மண்டலங்களைத் தாண்டி, அண்டசராசரங்களை அளந்து, பரந்த வெளியிலிருக்கும் ஆனந்தக் கூத்தனோடு நடனமாட விரும்புகின்றது. ஆனால் மனித-உடல், மனம் போன போக்கெல்லாம் சென்று புழுவைப் போல, கேவலம் சேற்றிலும், சாக்கடை யிலும் அழுந்தித் திணறி, நாக்குக்கும் மூக்குக்கும் கட்டுண்டு, உப்புக்கும் கூழுக்கும் ஏன் புகையிலைக்கும்: கூட- குற்றேவல் செய்கின்றது' என்கின்றார். இப்படிப் பேசிக் கொண்டே என்னைத் திருமூலர் சந்நிதிக்கே இழுத்துச் சென்று தத்துவ தரிசனத்தில் ஈடு படுத்துகின்றார்; ஆழங்கால் படச் செய்து விடுகின்றார். ஜஸ்டிஸ் பெருமான் பேசுகின்றார் : 'உடலுக்கும் உயிருக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் இந்தத்