பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைத் திரு. எஸ். ஜெரோம் டி செளசா 25 புறத்தான் என்பதை நன்கு புரிந்து கொண்டமையால் என்மீது அதிகப் பரிவு காட்டினார். நான் கதவை மெது வாகத் தட்ட வேண்டும் என்றும், தான் வருக என்று சொன்னவுடன் அறைக்குள் நுழைந்து தன்னைக் காண வேண்டும் என்றும், தான் என்ன வேண்டும்?' என்று கேட்டவுடன் காலாண்டுத்தேர்வில் இயற்பியலில் நான் பெற்றுள்ள மதிப்பெண்ணைத் தெரிந்து கொள்ள வந்தேன்’ என்று கூறவேண்டும் என்றும் தெரிவித்தார். என் தோளின் மீது தந்தை கையை அணைப்பது போல் போட்டுக் கொண்டு வந்து என்னை வெளியில் இட்டுக் கதவைச் சாத்தினார். என்னைக் கதவைத் தட்டச் சொன்னார். நான் தட்டினேன். வருக என்று குரல் கொடுத்தார். நான் அவர் முன்னிலையில் வந்து அடக்க ஒடுக்கமாக நின்றேன். எதற்காக வந்தாய்? என்ன வேண்டும்? என்று வினவினார். நான் காலாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் தெரிய வேண்டும்’ என்றேன். 20 சதவீதம் பெற்றுள்ளாய் நன்றாய்ப் படிக்கவேண்டும்’ என்று அறிவுறுத்தினார். எதிர்காலத்தில் யாரைப் பார்க்கச் சென்றாலும் இம்முறையைப் பின்பற்றுக’ என்று கூறி, படிப்பு மட்டிலும் முக்கியமன்று மதிப்பெண்கள் அதிகம் பெறுவதைவிட நடந்து கொள்ள வேண்டிய வகைமுறைகளைக் கற்றுக் கொள்வது மிகவும் முக்கியம் என்றும், இதுதான் வாழ்க்கையில் நற்பயன் விளைவிக்கும் என்றும் அறிவுறுத்தினார். இந்த அறிவுரை இன்றும் என் நினைவில் பசுமையாகவுள்ளது. இவரிடம் இயற்பியல் அறிந்து கொண்டதைவிட் வாழ்க்கையின் ஒழுக்கமுறை களை நன்கு தெரிந்து கொண்டேன். இந்த ஆண்டு மூன்று தேர்வுகளிலும் வகுப்பு மாணவர் களில் ஒருவர் கூட 20 சதவிகிதத்திற்குமேல் வாங்க வில்லை. வகுப்பின் அடுத்த பிரிவில் 70 சதவிகிதத்திற்கு மேல் பெற்றிருந்தனர். வகுப்பு சராசரி மதிப்பெண்ணும் எங்கள் பிரிவு சராசரி மதிப்பெண்ணைவிட மூன்று