பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔密 மலரும் நினைவுகள் மடங்கிற்கு மேல் இருந்தது. இந்தப் புள்ளி விவரங்களைக் கண்டார் முதல்வர் ஜெரோம் டி செள சா. ஒரு பிரிவின் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் மக்குகள் என்று கருதுவது தவறு என்று தெளிந்தார். அப்படி மக்குகளாக இருந்தால் ஏனைய பாடங்களிலும் தேர்ச்சி மிகக் குறை வாக இருக்க வேண்டுமல்லவா? அப்படியில்லையே. இங்கு நோய் மாணாக்கர்களிடம் இல்லை. ஆசிரியரிடம் தான் இருக்கவேண்டும் என்பதைத் தெளிந்தார். நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். (குறள்-948) என்பது வள்ளுவரின் வாக்கன்றோ? சரியான மருத்துவத் தைச் சரியான காலத்தில் செய்தார். - அந்த ஆண்டு 1935) பி. எஸ் சி. (ஆனர்சு) தேர்வில் கல்லூரியில் முதல்வனாகவும் முதல் வகுப்பிலும் தேர்ச்சிப் பெற்றிருந்தார் சவரிமுத்து என்ற மாணாக்கர். இவர் சுறுசுறுப்பானவர்; உற்சாகம் மிக்க இளைஞர். இவரை துணை விரிவுரையாளராக நியமனம் செய்து எங்கள் வகுப்பை இவர் பொறுப்பில் விட்டார். இந்தப் புதிய மருத்துவர் அற்புதமாகச் செயல் பட்டார். புதை சூசையப்பர் கல்லூரியில் புதனும் ஞாயிறும் வாரவிடுமுறை நாட்கள். சனி ஞாயிறு விடுமுறைகளாக இருப்பின் ஐந்து நாட்கள் கற்றவற்றை மாணாக்கர்கள் இரண்டு நாட்களில் மறக்கக் கூடும் என்ற நடைமுறை உண்மையைக்உளவியல் உண்மையைக்-கண்டறிந்தவர்கள் கல்லூரி நிர்வாகத்தினர். இந்தக் கை தேர்ந்த மருத்துவராகிய பேராசிரியர் சவரிமுத்து அவர்கள் புதன்கிழமை தோறும் இயற்பியல் பாடத்திற்குத் தனி வகுப்புகள் ஏற்படுத்தி முதலாண்டுப் பாடங்களைத் திரும்பக் கற்பித்தார். வார வேலை நாட்களில் இரண்டாம் ஆண்டுக்குரிய பாடங் கள் கற்பிக்கப்பெற்றன. எல்லா மாணாக்கர்களுமே முதலாண்டுப் பாடத்தில் மிகத் தெளிவு பெற்றனர். இரண்டாம் ஆண்டு காலாண்டுத் தேர்விலேயே பலர்