பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜஸ்டிஸ் டாக்டர் எஸ். மகராஜன் 423. எப்பொழுது போனாலும் அது ஜஸ்டிஸுக்கு ஒய்வாக மட்டிலும் இருந்து விட்டால் சொல்ல வேண்டியதில்லை, பெரிய இலக்கிய விருந்து கட்டாயம் கிடைத்துவிடும். நான் சென்ற போது கலைமகளில் வெளி வந்த நீலத்திகிரி: என்ற கட்டுரையையும், அதைப் பாராட்டி ஆங்கிலத்தில் பேராசிரியர் அ. சீநிவாசராகவன் எழுதியிருந்த நீளமான ஆங்கிலக் கடிதத்தையும் படித்துக் காட்டினார். இரண்டும் நயத்திலும் மொழி நடையிலும் ஒன்றையொன்று வெல்லு வதாக அமைந்திருந்தன. நீலத்திகிரி என்ற இலக்கியக் கட்டுரை ஞாலத்திகிரி எனத் தொடங்கும் பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் திருவரங்கத்து மாலையிலுள்ள ஒரு பாசுரத்தின் (89) விளக்கமேயாகும்.' இந்தக் கட்டுரை அறிவியலடிப்படையில் அமைந்த ஒன்று:ஜஸ்டிஸ் அவர்களின் அறிவியற்புலமை, இலக்கியப்புலமை, சிந்தனை ஆற்றல் இவற்றை அற்புதமாக விளக்கி நிற்கின்றது. மணிவிழா மலருக்கு இவர் அனுப்பிய ஆசிச் செய்தி : - I have known Dr. N. Subbu Reddiar for over a quarter of a century. He is a rare phenomenon in the field of Tamil Scholarship. While most Tamil Scholars confine their studies to their mother-tongue-in fact, they know more and more about less and less- Dr, Subbu Reddiar has widerange of interests and bilingual competence. The numberless books he has published cover a magnificent spectrum cf themes, right from Sciences through Literature and Education to Philosophy and Religion. And yet he has preserved his exeguisite sensibilities and a fine literary . 11. இது நூல் வடிவம் பெற்று தெய்வமாக்கவி என்ற நூலில் (பழநியப்பா பிரதர்ஸ், சென்னை6 00 014) 6-வது கட்டுரையாக வெளி வந்துள்ளது . -