பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

臺總證 மலரும் நினைவுகள் தடைபெற்றது. இதில் கம்பனடிப் பொடி சா. கணேசன், தமிழ்இலக்கிய வரலாற்றுப்பேராசிரியர் மு.அருணாசலம், உத்திரப் பிரதேச முன்னாள் ஆளுநர் திரு. B. கோபால ரெட்டி, ஜஸ்டிஸ் மகராஜன் ஆகியோரைப் பங்கு பெற ஏற்பாடு செய்தேன். அப்போது ஜஸ்டிஸ் மகராஜன் ஒய்வு பெற்று தமிழ்நாடு ஆட்சி மொழி (சட்டம்) ஆணையத்தின் தலைவராகப் பணி புரிந்து கொண்டிருந்தார். கம்பனில் ஊறித் திளைத்த இரு பெரியார்கள் இக்கருத்தரங்கில் பங்கு கொண்டது எங்கட்கு மிக்க மன நிறைவைத் தந்தது. பெரும்பாலும் கருத்தரங்கின் தொடக்க அமர்வின் நிகழ்ச்சிகள் யாவும் (தமிழ் நடையாடாமல் செய்யப் பட்ட தேசமாதலின்) ஆங்கிலத்திலே நடைபெறும் மரபை யும்,அழைப்பிதழும் ஆங்கிலத்திலேயே வழங்கும் மரபையும் மேற்கொண்டிருந்ததால் மக்கள் திரண்டு ஆட்சி மன்ற மண்டபம் நிறைந்திருக்கும். ஜஸ்டிஸின் ஆங்கிலச் சிறப்புரை மிகவும் அற்புதமாக அமைந்து கருத்தரங்கிற்குப் பொலிவும் பெருமையும் தந்தது. திரு. கோபால ரெட்டி, திரு. அருணாசலம் இவர்களின் ஆங்கில உரைகளும் கூட்டத்தினரின் கவனத்தைக் கவர்ந்தன. நினைவு-6 : 1976-ஆகஸ்டில் என் மணிவிழா திருமலையில் இறைவன் சந்நிதியில் இறைவன் திருமண விழாவாக அமைதியாக நடைபெற்றது. 1977-செப்டம் பரில் (24) நடைபெற்றது தமிழ்துறையில் திரு. M அனந்தசயனம் அய்யங்கார் அவர்களின் சீரிய தலைமை யில். இந்த ஆண்டு மார்ச்சுத் திங்கள் முதல் வாரத்தில் ஜஸ்டிஸ் மகராஜன் அவர்களைச் சென்னையில் அவர் இல்லத்தில் சந்தித்து (1) மணிவிழா மலருக்கு ஆசிச் செய்தியும், (2) அரிய ஒரு கட்டுரையும், (3) கம்ப ராமாயணக் கருத்தரங்கில் ஒரு சிறப்புரை நிகழ்த்துமாறும் (ஆங்கிலத்தில்) வேண்டினேன். மூன்று வேண்டுகோளையும் அன்புடன் நிறைவேற்றினார்.