பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~. - سيمبية பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் 429 வாரா; பொருந்துவன போமின்’ என்றால் போகா " (நல்வழி- 5) என்ற ஒளவைப் பாட்டியின் வாக்கும் நம் நினைவில் மலர்கின்றன. நிற்க . "தலைமைப் பேராசிரியர்' பதவியைத் திரு. தெ.பொ.மீ.க்கு வழங்குவதற்கு அரசு நினைத்தாலும் இதற்கு எதிர்ப்பாக பல எதிர்ப்புச் சக்திகள் கிளம்பின. திரு. தெ.பொ.மீ.க்குத் தமிழில் எம்.ஏ. பட்டம் இல்லை. யென்றும், வரலாற்றில் எம்.ஏ. பட்டம் பெற்றவருக்கு இப் பதவி வழங்குவது அடாத செயல் என்றும் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவில் (Syndicate) எதிர்ப்புக் குரல் எழுந்தது. பெருந்தலைவர் காமராசரின் தலையீட். டால் அப்போது முதலமைச்சராக இருந்தவர்) டாக்டர் A.I. முதலியார் அவர் பெற்றுள்ள M.O.L (தமிழ்ர்பட்டம் போதும் என்று கூறி ஆட்சிக் குழுவைத் தம் வசப்படும் . எதிர்ப்புக் குரலை அடக்கினார். தெ.பொ.மீ, தகுதிக்கு விதிவிலக்கு அளிக்கப் பெற்று மா கல்லூரியின் முதல் தமிழ்த் தலைமைப் பேராசிரி பதவியில் அமர்த்தப் பெற்றார். r வல்லான் வகுத்ததே வாய்க்கால்' எனும்பெரு வழக்குக்கு இழுக்குமுண்டோ?* என்ற தாயுமான அடிகளின் திருவாக்கும். இப்போது நம் நெஞ்சில் எழுகின்றது. தெ.பொ.மீ.யின் விஷயத்தில் தாள் தகுதியை (Paper qualification) விடத் 36,535.jpg), 365 (Ability qualification) மதிப்பு அளிக்கப் பெற்றதை அறிஞருலகம் போற்றி மகிழ்கின்றது. மாநிலக் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பேராசிரிய ராக இருந்த காலத்தில்தான் இவர் எனக்கு அறிமுக மானார். இவரது பல நற்குணங்களையும் புலமைநயத் தையும் அறிந்து கொள்ள காரைக்குடி கம்பன் கழகம் வாய்ப்புகள் அளித்தது; எனக்கு இப்பெரியாருடன் 3. தாயுமானவர் பாடல்-சுகவாரி-3 .