பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 0. மலரும் நினைவுகள் நல்லிணக்கமும் ஏற்பட்டது. நாங்கள் எல்லாம் குருதேவ்' என்றே செல்லமாகவும் அழைத்தோம். இவரும் தமிழுலகில் ஒரு தனிப் பெருமையுடன் விளங்கினார். இங்ங்னம் இவர் பெற்ற பெருமைக்குக் காரைக்குடிக் கம்பன் கழகமும் அதை நிறுவிய திரு. சா. கணேசனும் காரணமாக அமைந்தமையையும் நினைக்கின்றோம். சென்னையில் தனியாக வித்துவான் தேர்வு எழுதுவதற்குப் பலருக்குப் பாடம் சொன்னதாலும் புகழ்பெற்றுத் திகழ்ந்தார், வடிவேல் செட்டியார் போன்ற பெரியார்களின் தொடர்பின் காரணமாகச் சமயங்களைப்பற்றிய அறிவும் இவர்தம் சொத்தாக அமைந்ததால் இவர் புகழ் மேலும் பரவியது. நான் இவருடன் நெருங்கிப் பழகியதால் என் வளர்ச்சியையும் கவனிக்க இவருக்கு வாய்ப்பு ஏற்பட்டது. 1957-58 என்பதாக நினைவு. காரைக்குடி அழகப்பா கல்லூரித்(தமிழ் எம்.ஏ. வகுப்பு தொடங்கப் பெற்றகாலம்) தமிழ்ப் பேரவையைத் தொடங்கி வைக்கத் திரு' தெ.பொ.மீ. காரைக்குடிக்கு வந்திருந்தார். கல்லூரி வட்டத்திலுள்ள பவநகர் ஆடரங்கிலுள்ள அறையில் தங்கி யிருந்தார். அப்போது அழகப்பா கல்லூரியின் முதல்வர் திரு. அலெக்ஸாண்டர் ஞானமுத்து; அழகப்பா ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியின் முதல்வர் திரு ப. துரைக்கண்ணு முதலியார். முன்னவர் எதையும் சாதிக்கும் தன்மையர்; பின்னவர் முந்திரிக் கொட்டைபோல் மூக்கை நீட்டாது அடக்கமான பண்பினர். தவிர, தெ.பொ.மீ. சிந்தாதிரிப் பேட்டை உயர்நிலைப் பள்ளியின் தாளாளராகவும் திரு ப. துரைக்கண்ணு முதலியார் அப்பள்ளியின் தலைமை யாசிரியராகவும் இருந்த காலத்தில் பல்லாண்டுகள் நன்கு பழகியவர்கள். இதனை நன்கு அறிந்த நான் திரு முதலியாரிடம், 'நம் தமிழ் மன்றக் கூட்டத்தைப் முற்பகல் 11-மணிக்குத் தொடங்கி தெ.பொ.மீ.யைப் பேசச் செய் வோம். நீங்கள் சென்று அவரை அழைத்து வாருங்கள்' என்றேன். அவர், அலெக்ஸாண்டர் ஒரு மாதிரியானவர்.