பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் 431 நமக்காக வந்திருப்பவரைப் பயிற்சிக் கல்லூரி பயன் படுத்திக் கொள்வதா?’ என்று சங்கடப் (பொறாமைப்) படுவார்' என்றார். நான், நீங்கள் புருஷோத்தமனாக மாறி தெ.பொ. மீயைக் கைப்பிடித்துக் கொணர வேண்டும்’ ’ என்று ஒரு நகைச்சுவையை உதிர்த்தேன். திரு. முதலியார் சிரித்தார். நீங்கள் சென்று கூட்டி வந்தால் கூட்டத்தை நடத்தலாம்' என்றார். உடனே நான் மிதிவண்டியில் சென்று அவரைப் பேச ஒப்புக் கொள்ளச் செய்து (என் மிதிவண்டியை அங்கேயே வைத்து விட்டுக்) காரில் கூட்டி வந்தேன். ஒரு மணி நேரத்தில் கூட்டத்தை அற்புதமாக முடித்தோம். பகல் 12-15க்கு தெ.பொ. மீ.யை ஆடரங்கில் கொண்டு சேர்த்தேன். அப்போது அழகப்பா கல்லூரிப் பேராசிரியர்கள் க. தேசிகன், அ. மு. பரிமணம், இரா. சாரங்கபாணி, உ. பாலசுப்பிர மணியம் முதலியோர் தெ.பொ. மீ.யைப் பார்த்து அளவளாவவந்திருந்தனர்.அப்போதுதெ.பொ.மீ. அவர்கட்கு எனது பெரிய நூலாகிய தமிழ் பயிற்றும் முறை" யில் ஒரு படியைக் கொடுத்திருந்தேன்; நூலின்படி தெ.பொ.மீ. யின் கையிலிருந்ததைப் பார்த்த திரு. க. தேசிகன் என்னை நோக்கி, 'ரெட்டியார், அடுத்த யானைக்குட்டி (தமிழ் பயிற்றும் முறை பெரிதாக இருந்தமையால் இப்படிச் சுட்டினார்) எப்போது வரப் போகின்றது?’ என்று கிண்டல் பாவனையில் கேட்டார். நானும் கஜகருப்பம் என்று சொல்வார்கள். யானைக் கருப்பம் பதினான்கு திங்கள் என்பர். சாவகாசமாகத்தான் அடுத்த குட்டி வெளிவரும்' என்று கிண்டல் பாவனை யிலேயே மறுமொழி பகர்ந்தேன். கூடியிருந்தோர் அனைவரும் எங்கள் பேச்சைச் சுவைத்து மகிழ்ந்தார்கள். தெ.பொ.மீ. சொன்னார்: ரெட்டியார் வெளியிடு வதற்கு ஆள் இருக்கின்றார் என்று எழுதியவுடன் நூலை வெளியிட்டு விடுகின்றார். அப்படிச் செய்யக் கூடாது