பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.32 மலரும் நினைவுகள் எழுதியதை அப்படியே கட்டி வைத்து விடவேண்டும். ஒராண்டு கழித்துத் திருப்பிப் பார்த்தால் திருத்த, வேண்டியவை தெளிவாகும். பிறகு திருத்தி வைத்துவிட வேண்டும். இப்படியே சில ஆண்டுகள் செய்து வந்தால் நூல் சிறப்புற அமையும் அப்பொழுதுதான் நூல் அச்சிடப் பெறல் வேண்டும்' என்று. நான் சொன்னேன்: 'சில ஆண்டுகள் கழித்தும் அந்த நூல் குறைபாடில்லாது இருக்கும் என்பதற்கில்லை. நாம் வாழ்நாள் முழுவதும் இப்படியே மாற்றிக் கொண்டே போனாலும் முழுமை அடைய முடியாது. ஏனெனில், கருத்துகள் வளர்ந்து கொண்டே போகும்; மாறிக் கொண்டும் போகும்; நூல் என்றுமே வெளிவர முடியாது. தாங்கள் கூறும் யோசனை நடைமுறைக்கு ஒவ்வாது. ஒரு முட்டாள் கூட உங்கள் அறிவுரையை ஒதுக்கித் தள்ளி விடுவான். அந்த முட்டாளுக்குக் கீழ்ப்பட்டவன் அல்லன் நான்' என்று மேலும் தொடர்ந்து, ! உங்களைப் போன்று. இல்லாவிட்டாலும் உங்கட்குக் குறைந்த அளவாவது எனக்கும் அறிவு உண்டு; கருத்தும் உண்டு. அதன்படிதான் நான் நடப்பேன். உங்கள் அறிவுரையை, இதோ இருக்கின்றதே (குப்பைத் தொட்டியைச் சுட்டிக்காட்டி): அதில்தான் போடுவேன்' என்றேன். இப்படி நான் கூறுவேன் என்று கூடியிருந்தோர் கருதவில்லை. தெ.பொ.மீ.யும் கருதவில்லை. அவர் என்னைக் கூர்ந்து நோக்கினார். அருகிலிருந்தோர். பார்வையும் என் பக்கம் திரும்பியது. தெ.பொ.மீ. சொன்னார்: ரெட்டியார், நீங்கள் உண்மையிலேயே. என் ஞானக் கண்ணைத் திறந்தீர்கள். இப்போது இங்குக் கூடியிருப்பவர்கள்போல் எப்போதும் என்னைச் சூழ்ந்து கொண்டு துதிபாடும் ஒரு சிறு கூட்டம் (Sycophants) இருக்கும். அவர்கள் பாடும் துதியில் மயங்கி வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருந்தேன். என் சிந்தனையும் மழுங்கியது. நீங்கள் செய்து வருவதுதான் சரி. மாற்றம்