பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் 433 இருப்பின் அடுத்து வரும் பதிப்புகளில் சரிசெய்து கொள்ள லாம். தொடர்ந்து எழுதுங்கள்; அதிக நூல்கள் வெளி வரட்டும். வாழ்க நும் திருப்பணி ' என்று வாழ்த்தினார். கூடியிருந்தோர் அனைவரும் என் துணிவான மறுப்புரை யைப் போற்றினார்கள்; வியந்தார்கள். 1957-58 ஆண்டின் இறுதியில் புகுமுக வகுப்பிற்கு அறிவியல் பாடங்களைத் தமிழில் எப்படிக் கற்பிக்கலாம் என்ற முறைகளை ஆய்வதற்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆறுவாரக் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அப்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த திரு. தி.மு. நாராயணசாமி பள்ளை தகுவழிகாணும் திறமுடையவனாக (Resource Person) என்னை நியமித்திருந்தார். நான் பல்கலைக்கழக விருந்தின னாக விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தேன். ஒருநாள் தெ.பொ. மீ.யும் வந்திருந்தார். இருவரும் காலை உணவின் போது உண்ணும் அறையில் சந்தித்தோம். தாம் துணை வேந்தரின் சிறப்பு அழைப்பின்படி வந்திருப்பதாகக் கூறினார். டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார் இருந்த இடத்தில் தம்மை நியமிக்கும் விஷயமாகக் கேட்டறிவதற்காகவே இந்த அழைப்பு இருக்கலாம். என்றும் குறிப்பாகத் தெரிவித்தார். உங்கள் நல்லுள்ளம் வாழ்க. தாமாக வரும் பணியை உதறித்தள்ளாமல் ஒப்புக் கொள்ளுங்கள்' என்றேன். ஒரு சில திங்களில் ரூ 1250). இல் (அப்போது பேராசிரியர் ஊதியத்தில் இது உயர் வெல்லை.) பேராசிரியராக வந்து சேர்ந்தமை குறித்து மகிழ்ந்தேன். கொடுக்கின்ற தெய்வம் இருந்தால், கூரையைப் பொத்துக் கொண்டும் கொடுக்கும்' என்ற பழமொழியை நினைத்துக் கொண்டேன். ஒரு காமராசர் துணையினால் மாநிலக் கல்லூரியில் நுழைந்தார்; ஒரு நாராயணசாமி பிள்ளையின் உதவியால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புகுந்தார். அறிவுடை ஒருவனை அரசும் விரும்பும்' என்ற அதிவீரராம பாண்டியனின் ம நி-28