பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 மலரும் நினைவுகள் திருவாக்கை நினைத்துக் கொண்டேன். தெ.பொ.மீ. விஷயத்தில் ஆகூழ் செயற்படுவதைக் கண்டு வியந்து போனேன். 1960-ஆகஸ்டு முதல் காரைக்குடி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிப் பேராசிரியர் பணியைத் துறந்து திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரை யாளர் பணியை ஏற்றேன். அந்த ஆண்டு பி.ஏ, பி, எஸ்கி வகுப்புகளில் தமிழ்ப் படித்த மாணவர் ஒருவர்தான் இருந்தார். உற்சாகமின்றிக் காலம் கழிந்தது. 1962-இல் தெ.பொ.மீ. சென்னையில் முன்னின்று நடத்திய மொழி பெயர்ப்புக் கருத்தரங்கிற்கு என்னைப் பார்வையாளராக அனுப்பி வைத்தது திருவேங்கடவன் பல்கலைக் கழகம். இந்தக் கருத்தரங்கு மயிலாப்பூர் உட்லாண்ட்ஸ் உணவு விடுதியில் மூன்று நாட்கள் நடைபெற்றது. நான் மயிலாப்பூரில் பன்மொழிப் புலவர் வேங்கடராஜூலு ரெட்டியார் இல்லத்தில் தங்கிக் கொண்டு நாடோறும் கருத்தரங்கில் கலந்து கொண்டேன். இக்கருத்தரங்கில் டாக்டர் W. A. தேவசேனாபதி (சென்னைப் பல்கலைக் கழகத் தத்துவத்துறை இணைப் பேராசிரியர்) டாக்டர் மொ. அ. துரை அரங்கனார் (சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர், டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் (சென்னைப் பல்கலைக் கழக ஆங்கில-தமிழ் அகராதி தலைமைப் பதிப்பாசிரியர்) டாக்டர் வி.ஐ. சுப்பிரமணியம் (கேரள பல்கலைக் கழகத் தமிழ்த் துறை இணைப் பேராசிரியர்) ஆகியோர் பேராளர்களாகக் கலந்து கொண்டனர். நான் இத்தகைய கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் அநுபவம் பெற வேண்டும் என்றே என்னை அனுப்பிவைத்தார் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்துணை வேந்தர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு அவர்கள். இக்காலத்தில் 4. வெற்றிவேற்கை-39