பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் 435 அறிவுக்கு விருந்து' என்ற நூல் ஒன்றை (ஒன்பது கட்டுரை களின் தொகுப்பு) வெளியிட்டேன். நான் திருப்பதியில் பணியாற்றியபோது கவிதை யநுபவம்’ என்ற தலைப்பில் பெரிய அளவில் திறனாய்வு நூல் ஒன்று (மே திங்கள் 1961) வெளிவந்தது. அப்போது தெ.பொ. மீ. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர்-பேராசிரியர். அணிந்துரை ஒன்று இந்நூலுக்கு அருளுமாறு வேண்டியதற்கிணங்க அரிய தோர் அணிந்துரையை அருளினார். அணிந்துரையில் திருவாளர் ந. சுப்புரெட்டியார் அவர்கள் கவிதை யநுபவம்” என்ற நூலை எழுதித் தமிழ் நாட்டிற்கு உதவு கின்றார். இலக்கிய ஆராய்ச்சியினை ஒரு கலையாகக் கொண்டு அதனை விளக்குவதற்கு எழுந்தது இந்நூல். ஓயாது உழைத்து மிகமிக நீண்ட நூல்களை எழுதி வருவதில் நண்பர் தலைசிறந்தவர். கவிதையதுபவம்' என 417 பக்க அளவிலே ஒரு பெரு நூலை இப்போது எழுதித் தந்துள்ளர் (என் நண்பர் க.தேசிகன் மொழியில் கூறினால் இஃது எனது இரண்டாவது யானைக் குட்டி). மேலை நாட்டு அறிஞருடைய கருத்துகள் நம் நாட்டு அறிஞர்களின் எண்ணங்கள், வடமொழி ஆராய்ச்சி வாணரின் போக்குகள் முதலிய அனைத்தையும் இங்கே நண்பர் விளக்குகின்றார்.......எனவே, இந்நூல் இலக்கிய ஆராய்ச்சியின் பல துறைகளையும் விளக்குவதாகக் கொள்ளலாம். தமிழ்ப் பாடல்கள் பல இங்கு எடுத்துக் காட்டுகளாக வருவதால் இக்கொள்கைகளை விளக்கமாக அறிதற்கு இங்கே வாய்ப்புண்டு......நண்பர் தொண்டுள்ளத் தில் பழுத்த அன்பின் காணிக்கைகளைத் தமிழன்னைக்கு மேலும் மேலும் செலுத்தி உயர்ந்தோங்கி வாழ்வாராக ' என்று வாழ்த்து கூறினார். இவ்வாழ்த்திற்கு என்றும் என் நன்றி இவருக்கு உரியது. 1963-இல் அறிவுக்கு விருந்து' என்ற நூலைச்சென்னைப் பல்கலைக்கழக பி.ஏ., பி.எஸ்.சி. வகுப்புகளுக்குப் பாட