பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

《霹教 மலரும் நினைவுகள் பல்கலைக் கழகம் பேராளனாக அனுப்பி வைத்தது. திருப்பதியிலிருந்து நான், தெலுங்கு விரிவுரையாளர் டாக்டர் கே. மகாதேவசாஸ்திரி, வரலாற்றுப் பேராசிரியர் எம். இராமராவ், வடமொழி இணைப் பேராசிரியர் டாக்டர் சிரீ கிருஷ்ணசர்மா ஆகிய நால் வரும் கலந்து கொண்டோம். எங்கட்கு டில்லியில் இந்திரப் பிரஸ்தா தோட்டத்தில் பொருளாதார ஆய்வுமையஉணவு விடுதியில் தங்க இடம் தரப்பெற்றிருந்தது. உணவுக்குரிய செலவு நாளொன்றுக்கு ஒன்பது ரூபாய் தரவேண்டி யிருந்தது. நல்ல உணவு; சத்துணவு. நாடோறும் மாநாட் டிற்குப் போய் வர பேருந்து வசதிகள் செய்யப் பெற். றிருந்தன. நான் திராவிடமொழிப்பகுதியில் தெ.பொ. மீ. u?sät g;6060601Du76) The Concept of one India in Ancient Tamil Literature என்ற ஆய்வு கட்டுரையைப் படித்தேன். தெ. பொ. மீ. இதனை மிகச் சிறந்த கட்டுரை என்று. பாராட்டினார். மாநாட்டிற்குவந்திருந்த டாக்டர். மு.வ. (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர்), டாக்டர் மொ. அ. துரை அரங்கனார் (செ.ப.க. தமிழ்த் துறை இணைப் பேராசிரியர்) ஆகியோரும் என் கட்டுரை யைப் பாராட்டினர். அப்போது புவனேசுவரத்தில் அனைத்திந்திய காங்கிரசு மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினைக் கொள்கையை முழங்கிக் கொண்டிருந்த காலம். இதனால் என்னுடைய ஆய்வுக் கட்டுரை செய்தித் தாள்களின் கவனத்தை ஈர்த்தது. எல்லாச் செய்தித்தாள்களிலும் என்னுடைய கட்டுரை முன்பக்கம் பெரிய எழுத்துகளில் புகழப்பெற்றது. 'பாருங்கள். இந்தியா ஒரே நாடு என்பதை இலக்கியச் சான்றுகளுடன் விளக்குகின்றார் ஒரு தமிழ்ப்பேராசிரியர்' என்று பெரிய எழுத்துகளில் பதிப்பித்துக் கட்டுரையின் சுருக்கம் அதன் கீழ்த் தரப் பெற்றிருந்தது. ஒரு திங்கள் கழித்து இந்தக் கட்டுரை இந்து நாளிதழிலும் நடுப்