பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் 439 பக்கத்தில் வெளி வந்தது. பதினைந்துக்கு மேற்பட்ட இந்தியத் துரதரகங்களிலிருந்து இக் கட்டுரையின் நகல் ஒன்றை அனுப்புமாறு கடிதங்கள் வந்தன. படியெடுத்து கட்டுரையைக் கேட்ட தூதரகங்களுக்கெல்லாம் அனுப்பி னேன். மாநாடு நடந்து கொண்டிருந்தபோது செய்தித் தாள்களின் முதல் பக்கத்தில் என் கட்டுரையைப் பற்றிய புகழ் மாலைகளைக் கண்டு தெ. பொ. மீயும் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தார்; டாக்டர் மு.வ. வும் என்னை மகிழ்ச்சியுடன் பாராட்டினார். 1965-முதல் தெ. பொ. மீ. புதிதாகத் தொடங்கப் பெற்ற மதுரைப் பல்கலைக் கழகத்தில் முதல் துணை வேந்தராக நியமனம் பெற்றார். நாட்டுப்பற்று மிக்கவர்; காந்தியை நினைந்து போற்றுபவர்; அவர்தம் கொள்கை களைக் கடைப் பிடிப்பவர், தமிழகத்தில் காங்கிரசு கட்சி யின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெருந் தலைவர் காமராசர் முதலமைச்சராக இருந்த காலம் . தெ. பொ. மீ, துணை வேந்தரானதில் வியப்பு ஒன்றும் இல்லை. இவ்விடத்தில், அறியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். (குறள்-443) என்ற வள்ளுவர் வாக்கும் நினைவிற்கு வருகின்றது. அரசியல் செல்வாக்குள்ள பெரியவர்களின் துணையும் ஊழ்வலியும் தெய்வசங்கல்பமும் இருக்கும்போது வருவது தானே வரும்’ என்பதற்கு என்ன தடை செய்தித் தாள்கள் தெ. பொ. மீயிடம் இருக்கும் குணங்களையும் இல்லாத குணங்களையும் போற்றிப் பறை சாற்றின. நியமனத்திற்காக நடைபெற்ற பாராட்டுக் கூட்ட மொன்றில் டாக்டர் ஏ. எல். முதலியார் (சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்) கலந்துகொண்டு தெ. பொ. மீ பிறவித் துணைவேந்தர் என்று கூட பாராட்டிப் பேசுமளவுக்கு நிலைமை ஏற்பட்டது. இதுவே