பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 மலரும் நினைவுகள் உலகியல் என்பதை என் போன்றார் சிந்திக்கவும் இஃது ஒர் வாய்ப்பாக இருந்தது. நானும் திருப்பதியிலிருந்து ஒரு பாராட்டுக் கடிதம் எழுதி மகிழ்ந்தேன். இவர் மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த காலத்தில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வெளி யாகாமல் எனக்குத் திருப்பித் தரப் பெற்றதும் தமிழக அரசு வெளியீட்டுக் குழுவால் வெளியிட ஏற்றுக்கொள்ளப் பெறாததும், சென்னைப் பல்கலைக் கழகப் பரிசு பெற்றது மான "அணுக்கரு பெளதிகம்’ என்னும் நூலை தமிழ்ப் புத்தகாலயம்’ என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் வெளி யிட்டேன். (ஜூலை, 1966), இதனைப் பன்மொழிப் புலவருக்கு, சீலமார் தமிழ்த் தாய் புரிதவத் துதித்தோன்: செவ்விய நல்லுளச் செம்மல்; ஞாலமாம் கனியின் சாறெனத் தக்க நன்மொழி பலபல சுவைத்தோன்: கோலமார் மதுரைப் பல்கலைக் கழகக் கோயிலின் முதற்றுணை வேந்தன்; தாலமீ தோங்குமீ னாட்சிசுந் தரனார் தாள்மலர்க் குரியதிந் நூலே. என்ற பாடலின் மூலம் அன்புப் படையலாக்கிமகிழ்ந்தேன். நான் இவர்மீது கொண்டிருக்கும் மதிப்பிற்கும் மரியாதைக் கும் அறிகுறியாக இருக்கட்டும் என்று இவ்வாறு செய்த தைத் தவிர, வேறு ஒரு காரணமும் உண்டு. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாகிய ஆண்டாள் கண்ணன் மீது கொண்டிருந்த ஆராக் காதலைத் தமிழுலக மும் வைணவ உலகமும் நன்கறியும். கண்ணனென்னும் கருந்தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை (நாச். திரு. 13:1) என்ற நாச்சியார் திருமொழியின் தொடரும் இக் கருத்தை அரண் செய்யும். உள்ளுக்குள்ளே நைந்துகொண் டிரா நின்ற ஆண்டாள்,