பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

要垒盛 மலரும் நினைவுகள் அமைத்தேன். அணுக்கரு பெளதிகம் என்னும் அரிய நூலைச் சென்னைப் பல்கலைக் கழகமும், அரசு நூல் வெளியீட்டுக் கழகமும் போட முடியாமல் போனதற்கு வருந்தட்டும் என்றும், தனியார் நிறுவனம்மூலம் வெளி யிடப் பெற்றதற்கு மகிழட்டும் என்றும் கருதியே இவ்வாறு செய்தேன். தவிர, இந்த நூலைப் பார்க்கும் போதெல்லாம் இந்த இரு வேறு உணர்வுகள் மாறிமாறி எழட்டும் என்பதே என் குறிக்கோள். பொது மக்கள் இந்த நூலைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வரலாற்றை நோக்கட்டும் என்பதும் என் குறிக்கோளாக இருந்த்து. 1970-முதல் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ் எம். ஏ. வகுப்பு தொடங்கப் பெற்றது. பத்து ஆண்டுகளாக நான் ஒருவனே துறையின் ஒரே தமிழ் விரிவுரையாளனாக இருந்து வந்தேன். இப்போது: பேராசிரியர், இணைப் பேராசிரியர் பதவிகட்கு நியமனம் செய்ய வல்லுநர் குழு அமைக்கப் பெற்றது. இதில் தெ.பொ. மீ (மதுரைப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்) டாக்டர் மு. வ. இடம் பெற்றிருந்தனர். பேட்டி நடை பெறக் குறிப்பிட்ட நாளுக்கு ஐந்து நாட்கள் முன்வரை பேட்டிக்கான அறிவிப்பு எனக்குத் தரப் பெறவில்லை. டாக்டர் தா. ஏ. ஞானமூர்த்திக்கு மட்டிலும் அறிவிப்பு அனுப்பப் பெற்றதாகப் பதிவாளர் அலுவலகத்திலுள்ள ஓர் ஊர்க்குருவி மூலம் இச்செய்தியை அறிந்தேன். இரண்டு துணைவேந்தர்களும் கூடி ஏதோ சதித்திட்டம் போடுவ தாக என் உள்ளுணர்வு அறிவித்தது. உடனே துணை வேந்தருக்கு அவரைப் பார்ப்பதற்கு செவ்வி வேண்டி ஒரு கடிதம் எழுதினேன். நேரமும் நாளும் குறிப்பிட்டு ஒரு கடிதம் எனக்கு வந்தது. துணைவேந்தர் அறையில்தான் என் சந்திப்பு நிகழ்ந் தது, அறையில் துணைவேந்தரின் தனி அலுவலர் திரு. குருநாதம் என்ற இளைஞரும் இருந்தார். ஏதோ பெருந் தலைவர்கள் இருவர் கூடிய உச்ச மாநாடு (Bi- partite