பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் 448 conference) நடைபெற வேண்டிய சூழ்நிலை போல் இருந்தது இந்தச் சந்திப்புக்கு அமைந்த சூழ்நிலை. எடுத்த எடுப்பில், 'ஐயா, இன்னும் ஐந்து நாட்கள்தாம் உள்ளன. பேட்டிக்கான அறிவிப்பு எனக்கு வரவில்லை. ஏன்?' என்று துணைவேந்தரைக் கேட்டேன். நியமனம் பெறுவதற்கேற்ற தகுதிகள் உங்களிடம் இல்லாததால், உங்கள் விண்ணப்பத்தை அலுவலகம் ஒதுக்கி வைத்து விட்டது. அதனால் உங்களைப் பேட்டிக்கு அழைக்க வில்லை’ என்றார் துணைவேந்தர். நான் அப்படியா டாக்டர் ஞான மூர்த்திக்கு மட்டிலும் அறிவிப்பு அனுப்பப் பெற்றது ஏன்?' என்று கேட்டேன்; அஃது உங்கட்கு எப்படித் தெரிந்தது?’ என்றார் துணைவேந்தர். நான் "பதிவாளர் அலுவலகத்திலுள்ள ஒர் ஊர்க்குருவி என் காதில் கிசுகிசுத்தது’ என்றேன், யார் அந்த ஊர்க்குருவி? என்று வினவினார் துணைவேந்தர். அதை நான் வெளி யிடேன். இரகசியங்கள் வெளியில் கசியும் சந்துகளை அடைப்பது உங்கள் திறமை. தவிர, இங்கு நடைபெறுவது இட்லர், முசோலினி ஆட்சி அல்லவே' என்றேன். டாக்டர் ஞானமூர்த்தியை நியமிப்பதாக முடிவு செய்து பேரம் பேசுவதற்காகக் கடிதம் எழுதி வருமாறு பணித் தோம் என்றார் துணைவேந்தர். நான் அவருக்கும் தகுதி கள் இல்லை. தகுதிகள் இல்லாதவரை நியமிக்க பேரம் பேசுவது அடாத செயல்; விதிகளுக்குப் புறம்பானது. பல்கலைக் கழகம் தனிப்பட்டோரின் நிறுவனம் அல்ல, விதிகளை மீறாது நடக்கும் தாங்கள் இதில் விதிகளைக் காற்றில் பறக்க விட்டது எனக்கு மிக்க வருத்தத்தைத் தருகின்றது. பத்தாண்டுகள் தமிழக அரசுக்குக் காவடி எடுத்து மானியம் பெற்றதையும் மறந் தீர்கள். பயிற்சிக் கல்லூரியில் ஆற்றிய பத்தாண்டுகள் அநுபவத்தைக் கணக்கிற்கு எடுத்துக்கொண்டால் விதிகட்கு இணங்க என்னைப் பேட்டியில் கலந்து கொள்ள அனுமதித்திருக்க லாம்.இனி நீதியைக் கோரி ஐதராபாத் உயர்நீதி