பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 மலரும் நினைவுகள் மன்றத்தை அணுக வேண்டியதைத் தவிர வேறுவழி இல்லை' என்றேன். இவ்வாறு சொன்னதும் துணைவேந்தர் மனம் திடுக் கிட்டது அவர் முகத்தில் பளிச்சிட்டது. முகத்தில் ஈ ஆட வில்லை. தொலைபேசியை எடுத்தார். டாக்டர் ரெட்டியாருக்குப் பேட்டிக்கு வருமாறு அழைப்பு தாருங்கள்' என்று பதிவாளரிடம் சொல்ல, அவரும் நான் அறையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் உரிய கடிதத்தை நேரில் கொண்டு வந்து என்னிடம் தந்தார். டாக்டர் ஜகந்நாத ரெட்டி நேர்மையானவராதலால் டாக்டர் ஞானமூர்த்திக்காக ஏற்பாடு செய்யப் பெற்ற "ஓரங்க நாடகம்’ மூன்றங்க நாடகமாக மாற்றப்பட்டது. ரு தாமோதரனுக்கும் அழைப்பு அன்றே அனுப்பப் பட்டதைப் பின்னர் அறிந்தேன். இங்ங்னம் கிட்கிந்தைக்குச் சினத்துடன் வரும் இலக்குவனைத் தடுக்க வானரங்கள் அமைந்த தடைக்கல் போன்ற ஒரு தடைக்கல் அகற்றப் பெற்றது. இனி மூன்றங்க நாடகம்' நடைபெறப் போகின்றது. போட்டிக்கு முன் ட்பெற்ற இந்த வரலாற்றைத் தெ.பொ., மீ. எப்படி அறிவார்? ஒரு துணை வேந்தர் மற்றொரு துணைவேந்தருக்காகப் பாரபட்சமாக நடந்து கொள்வதை இறைவனும் பொறுத்துக் கொள்ள மாட்டான். இனி, பேட்டி (போட்டி?)நாடகம் நடை பெறுகின்றது. இதில் தெ. பொ. மீ.யின் அருவருப்பான நடிப்பைக் காணப் போகின்றோம், டாக்டர் ஞானமூர்த்தி முதலில் அழைக்கப் பெற்றார். தாம் துணைப் பேராசிரியர் பதவியை ஒப்புக் கொள்வதில்லை என்ற முடிவுடன் வெளி வந்து விட்டார் இரண்டாவதாக நான் அழைக்கப் பெற்றேன். எனக்கு அளிக்கப் பெற்ற பேட்டியினை விவரமாகக் கூறுவேன். பேட்டி ஆங்கிலத்தில் தான் நடை. பெற்றது.