பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் 445 டாக்டர் டி. ஜே. ரெட்டி : டாக்டர் ரெட்டியார், எப்படி உங்கள் வாழ்க்கையைத் தொடங்கினர்கள்? நான் : நானே தொடங்கிய ஒர் உயர்நிலைப் பள்ளி யின் தலைமையாசிரியனாக ஒன்பது ஆண்டுகள் பணி புரிந்தேன்; புதிதாகத் தொடங்கப் பெற்ற ஒரு பயிற்சிக் கல்லு ரியில் பத்தாண்டுகள் பணி புரிந்து, அங்குள்ள பேராசிரியர் பதவியைத் துறந்தேன்; தமிழக அரசின் தமிழ் வளர்க்கும் மானியக் கொள்கையைத் துணை கொண்டு மானியம் பெற்று இங்கு எம். ஏ. முதலிய பட்டங்கட்கு வசதி செய்யலாம் என்றே வந்தேன். இப் பல்கலைக் கழகத்தில் பத்தாண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றி இப்போது பதவி உயர்வை நாடி உங்கள் முன் வந்திருக்கின்றேன். டி. ஜே. ரெட்டி : டாக்டர் ரெட்டியார், தாங்கள் ஒரு மாநிலத்தின் கல்வி இயக்குநராக நியமனம் செய்து தனியுரிமையும் பெற் றிருப்பதாகக் கருதுங்கள். அப்படி நியமனம் பெற்றால் தாய்மொழி வாயிலாகக் கற்பிப்பது பற்றிய உங்கள் கருத்தென்ன? இதை ஆதரிப்பீர்களா? அப்படி ஆதரித்தால் கொச்சைமொழியைக் கையாளுவதை அனுமதிப்பீர்களா? நான் : புட்டிப் பாலைவிடத் தாய்ப்பால் சிறந்தது என்பதை சிறந்த மருத்துவராகிய தாங்கள் அறிவீர்கள். தாய்மொழி தாய்ப் பாலைப் போன்றது. ஆதலால் தாய் மொழி மூலம் கல்வி புகட்டும் திட்டம் எனக்கு உடன் பாடானது. ஆகவே, அதை முழு மூச்சுடன் ஆதரிப்பேன்; செயற்படுத்துவேன். ஆனால் கொச்சை மொழியை வகுப்பில் பாடம் கற்பிக்கும்போது ஒரளவு பயன்படுவதை அனுமதிப்பேன். பாட நூல்களில் கொச்சை மொழியைக் கையாளுவதை முழு மூச்சுடன் எதிர்ப்பேன்.