பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

金46 மலரும் நினைவுகள் டி. ஜே. ரெட்டி : அமைச்சர் முதலியோர் இதை ஆதரிக்கின்றார்களே. இஃது ஒர் இயக்கமாகவும் வேகமாக வளர்கின்றதே. நான் : வல்லுநர் குழு அமைத்து இதை வளர விடாமல் தடுப்பேன். முளையிலே கிள்ளி எறிவேன். தவி, அமைச்சர்கள் யாவரும் அறிஞர்கள் அல்லரே; வல்லுநரும் அல்லரே. டி. ஜே. ரெட்டி : அமைச்சர்கள் அறிஞர்கள் அல்லர்’ என்பதை நீங்கள் வெளியில் சொல்லியிருந்தால், உங்கட்குச் சிறைவாசம் தான் கிடைக்கும். . கான் : அமைச்சர்களே (பெரும்பாலோர்) அறிஞர் கள் அல்லர் என்பதை ஒப்புக் கொள்வர். அவர்களும் தமக்குப் பொருத்தமில்லாத விஷயங்களில் தலையி . மாட்டார்கள். தவிர, தேவையில்லாமல் என்னை; தூண்டினீர்கள். நான் கவடில்லாது விடையளித்தேன். டி. ஜே. ரெடடி : டாக்டர் ரெட்டியார், நீங்க. துணிவுடையவர்; உங்களைப் பேச்சில் மடக்க முடியாது, அதனால்தான் உங்களை நான் பேராசிரியராக.ே நியமனம் செய்ய வேண்டும் என்று கருதியுள்ளேன். பின்னர் வல்லுநர் குழுவிற்குக் கேட்கும் வாய்ப்பு அளித்தார். வல்லுநரில் தெ. பொ. மீ. கேட்கத் தொடங்குகின்றார், தெ. பொ. மீ. . டாக்டர் ரெட்டியார், நீங்கள் துறையூரை விட்டுக் காரைக்குடிக்கு ஏன் சென்றீர்கள்? இந்த வினா எழுந்ததும் மின்வேகத்தில் என் மனம் சிந்திக்கத் தொடங்கியது. இவர் வினாக்களுக்கு விளிப் புடன் விடை தருதல் வேண்டும் என்று கருதினேன்.