பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் 447 கான் : அஃது என் விருப்பம். மதிப்பிற்குரிய வல்லுநர் குழுவிற்கு என் சொந்த விஷயங்களில் தலையிட எந்த வித உரிமையும் இல்லை. (இது சற்றுக் கடுமையான விடையாகி விடுமோ என்று கருதி) காரைக்குடியினர் எனக்கு அழைப்பு விடுத்தார்கள். அதனால் காரைக்குடிப் பணியை நான் ஏற்றுக் கொண்டேன். தெ. பொ. மீ. : காரைக்குடிக்கு நீங்கள் சென்றிருக்க வேண்டியதில்லை, தலைமையாசிரியர் ஊதியம்தான் உயர்த்தப் பெற்று விட்டதே. கான் : நான் காரைக்குடிக்குச் செல்வதும் செல்லாத தும் என் விருப்பம். எனக்கு நல்வாழ்வு அமைத்துக் கொள்ளத் தெரியும் . தவிர, நான் ஊதியத்தைக் கருதியும் காரைக்குடி செல்லவில்லை. திங்கள்தோறும் ரூ.25| = இழப்பில்தான் காரைக்குடிப் பணியை ஏற்றேன்; தவிர, ஒன்பதாண்டுகள் தலைமையாசிரியனாக இருந்தது போதும் என்று கருதி, கல்லூரிப் பதவியை நாடிக் கொண் டிருந்தேன். காரைக்குடி பணிபற்றிய விளம்பரம் எப்படியோ என் கவனத்திற்கு வராமல் போயிற்று. அதனால் விண்ணப்பம் அனுப்பவும் வாய்ப்பில்லாது போயிற்று. தானாக வந்ததைத் தள்ள வேண்டா என்று கருதி மூன்று திங்கள் ஊதியத்தைச் செலுத்தி (ஒப்பந்தப் படி) என்னை விடுவித்துக் கொண்டு காரைக்குடிச் சென்றேன். துறையூர் பள்ளி நிர்வாகத்தின் மீது ஒரு சிவில் வழக்கு தொடுத்திருந்தேன் சில தொகைகள் எனக்கு வர வேண்டு மென்று. இதுபற்றித் தெ. பொ. மீ. எனக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் ஏதோ வழக்கு நடைபெற்றது என்பதை அறிந்திருக்க வேண்டும். விவரம் வெளியார் அறியார். என் மீதுதான் பள்ளி நிர்வாகம் ஏதோ வழக்கு தொடர்ந் திருக்க வேண்டும் என்பதை வாயினின்றும் பிடுங்குவதற் காகவே முயன்றிருக்க வேண்டும்என்பதுஎன் ஊகம்.இதனை