பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 மலரும் நினைவுகள் வெளிப்படுத்தி விட்டால் ‘இவன் வம்புக்காரன், தலைமைப் பதவி இவனுக்குப் பொருந்தாது” என்று பின்னர் குழுவினிடம் விவாதிக்க முடியுமல்லவா? இவரும் ஒரு வக்கில் தானே. வக்கீல் தனத்தை என்னிடம் காட்ட முயன்று ஏமாற்றம் அடைந்தார் என்பதும் என் ஊகம். எனவே, வினாக்கள் விடுப்பதைத் திசை திருப்பினார். தெ பொ. மீ. காரைக்குடியில் வாரத்திற்கு எத்தனை மணி பணியாற்றினிர்கள்? நான் : குறைந்தது 14 மணி பணியாற்றி இருப்பேன்; அதற்கு மேலும் இருந்திருக்கலாம். தெ. பொ. மீ. : 14 மணிநேரம் நீங்கள் பணியாற்றி இருக்க முடியாது. பயிற்சிக் கல்லூரியில் வாரத்திற்கு நான்கு மணிக்குமேல் வேலை இல்லையே. நான் : கல்லூரியாசிரியர் வாரத்திற்கு பதினான்கு மணிநேரம் பணியாற்ற வேண்டும் என்பது பல்கலைக் கழகத்தின் விதி பயிற்சிக் கல்லூரியின் வேலையே தனி. விரிவுரை ஐந்து அல்லது ஆறுமணிதான் இருக்கும். பயிற்சி பெறுவோர் எழுதும் மாதிரிப் பாடக் குறிப்புகளைப் பார்த்தல், வகுப்பு எடுக்கும் விவரங்களைக் கூறல், வகுப்பு எடுக்கும் போது கவனித்தல், வேறு பள்ளிகளைப் பார்வை இடும்போது அவர்களுடன் செல்லல் போன்ற பணிகள் இங்கு உண்டு. விரிவுரை நிகழ்த்தியவுடன் பணியைக் கழற்றிக்கொண்டு கைவீசிச் செல்லும் இடம் அல்ல பயிற்சிக் கல்லூரி. பதினான்கு மணி அல்ல, 5 x 5 = 25 மணி பணியாற்றினேன் என்று கூடச் சொல்ல லாம். இவற்றையெல்லாம் துணைவேந்தர் அறிவதற்கு வாய்ப்பு இல்லை. பணிக்களத்தின் தலைவராக உள்ள கல்லூரி முதல்வரே அறிவார். இப்படி வினாக்கள் விடுத்தமைக்குக் காரணம் என்ன? என் பேட்டியின்போது நான் எழுதி வெளியிட்டிருந்த இருபத்து ஆறு நூல்கள் குழுவின் முன் பார்வைக்கு வைத் திருந்தேன். இவை பயனற்றவை; வெறும் குப்பை என்று