பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45? மலரும் நினைவுகள் நான் : கோபப்படவேண்டா. நான் காவியத்தைக் காண்பது திறனாய்வு நோக்கில்- சமய உண்மையை அடிப் படையாகக்கொண்டு. பாரதியார் வைதிக குடும்பத்தைச் சார்ந்தவர். அவருக்குச் சமய உண்மைகள் தெரியா என்று. சொல்லுவதற்கில்லை. இங்கு நான் கூறுவது வைணவ தத்துவ உண்மையாகிய சரணாகதியைப் பற்றியது. உட்சோதியிற் கலந்தாள்: அன்னை உலகினை மறந்தாள்;. ஒருமையுற்றாள்' என்று சொல்லும் போதே சரணாகதி’ நிறைவேறி விடுகின்றது. ஐய, நின் பதமலரே-சரண்’ என்ற வாக்கும் எழுந்து விடுகின்றது, சரணாகதிநிகழ்ந்த பிறகு தோத்திரத்திற்கும் இடம் இல்லை , சகஸ்ரநாம அருச்சனை போன்ற முறைக்கும்-பஜனைக் கும்-இடம் இல்லை. பொய்யர்தம் துயரினைப் போல் ... என்ற அடி ஒருமையுற்றாள்' என்ற தொடருடன் இணைந்தால் காவியம் அற்புதமாக நடைபெறுவதைக் காணலாம். இதற்கு இடையிலுள்ள பகுதி முழுவதும் தேவை இல்லை என்பது என் கருத்து வில்லி பாரதத்திலும் ஆறாகி இரு தடங்கண் அஞ்சன வெம்புனல் சோர (வில்வி பாரதம்குதுப்போர்- 246) என்ற ஒரு பாடவில் கோவிந்தா! கோவிந்தா!' என்று அரற்றிச் சரணாகதியை முடித்து விடு இன்றார் வில்லிபுத்துாராழ்வார். இப்படிப் பாரதியும் சகஸ்ரநாமம் போன்ற அருச்சனையின்றி காவியத்தை அமைத்திருந்தால் காவியம் அற்புதமாக அமைந்திருக்கும். இந்த இடைச்செருகல் காவியத்திற்கு ஒரு சொட்டு வைத்தது போலாகி விட்டது. இதைக் கேட்டதும் தெ.பொ.மீ. சீறத் தொடங்கு கின்றார். என்னுடைய திறனாய்வுக் கருத்தை சீரணித்துக் கொள்ள முடியவில்லை. சீரணிக்க முடியாவிட்டாலும் அமைதியுடன் கேட்டிருக்கலாம். பாராட்ட முடியா விட் உாலும் வாளா அப்படியே விட்டிருந்திருக்கலாம். முடிய