பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மலரும் நினைவுகள் வகுப்பில் சேர்வதற்குப் பகீரதப் பிரயத்தனம் செய்தேன். ஆனால் அதில் இடம் தர மறுக்கப் பெற்றது. பத்து நாட்கள் நாடோறும் காலை ஒன்பது மணிக்குப் பாதிரி மார் மாளிகையில் முதல்வர் ஜெரோம் டி செளசாவிள் அறைக்குச் சென்று சத்தியாக்கிரகம் செய்தேன். முதல் நாளே முதல்வர் தந்தையவர்கள் மிஸ்டர் சுப்பு (கல்லூரி யிலும் சான்றிதழ்களிலும் இதுவே என் பெயர்: ரெட்டி யார் என்ற பின்னொட்டு உத்தியோகத்தில் சேர்ந்த பிறகு சேர்ந்தது, உன் உடல்நிலை சரி இல்லை. இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற நாலாண்டுகளில் ஆனர்சு முடிக்க வேண்டும் என்பது விதி. ஏற்கெனவே உன் உடல் நிலை சீர்கேட்டால் ஒராண்டு கழிந்தது. இன்னும் மூன்றாண்டு களில் ஏதாவது நேர்ந்தால் உன் வாழ்க்கை கெட்டொழி யும். உன் உடல் நிலையை உத்தேசித்தே நினக்கு ஆனர்சு வகுப்பில் இடத்தரவில்லை. வேதியியல் பி.எஸ்சிக்கு இயற்பியல் ஆனர்சை விட மதிப்பு அதிகம். ஆகவே அவ் வகுப்பிலே படி என்று தாயினும் சாலப்பரிந்து பேசினர் (ஆனர்சு வகுப்பு தொடங்கி நான்கு ஆண்டுகளில் படிப்பு முடியலாம் என்று பல்கலைக்கழக விதி திருத்தப்பெற்றது.) பத்து நாட்கள் முதல்வர் அறைக்குக் காவடி எடுத்தேன். முதல்வர் என் அவாவைப் புரிந்துகொண்டார்; சிறிதேனும் சினம் கொள்ளவில்லை. நாடோறும் ஒன்றும் பேசாமல் மெளனமாகவே சென்று வந்தேன். அவர் அறையில் அவர் கண்ணில் படுமாறு தரையில் அமர்ந்து தவம் கிடப்பேன். முதல்வர் தன் பாட்டுக்குத் தன் வேலையில் ஆழ்ந்திருப் பார். 9-45க்கு, மிஸ்டர் சுப்பு, என் அறையைப் பூட்டிக் கொண்டு சாவியைக் கல்லூரித் தலைமை எழுத்தரிடம் சேர்த்துவிடு' என்று சொல்லிவிட்டு வேகமாகக் கல்லூரிக்கு நடந்து விடுவார். இப்படியே பத்து நாட்கள் செய்து, பிறகு தானே காவடி எடுப்பதைத் தவிர்த்துக் கொண் டேன். சிறிதும் சினங்கொள்ள மல் இருந்த முதல்வர் ஜெரோம் டி செளசாவின் பெருந்தன்மையை-தந்தை .யின் பாசத்தை-இப்போது நினைக்கும்போது மயிர்