பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைத் திரு. எஸ். ஜெரோம் டி. செளசா 23 சிலிர்க்கின்றது. உள்ளம் புளகாங்கிதம் கொள்ளுகின்றது. இத்தகைய ஒர் ஆசிரியரை இந்த உலகில் காண்டல் அரிது. நினைவு-2 : பி.எஸ்சிமுதல் ஆண்டு பயிலும்போது ஆண்டார் தெருக்கோடியில் தேசியக்கல்லூரியை ஒட்டி யிருந்த ஒருவர் மாடியில் இருந்த ஐந்து அறையில் 10 பேர் தங்கிப் படித்ததாக நினைவு. அந்த வீட்டுக்காரர் ஒய்வு பெற்ற ஒரு பேராசிரியர். கடுந்துாய்மையாளர் (Puritan) பிராமண வகுப்பினர். மாடியில் தங்கியிருந்த நாங்கள் பத்து பேர்களும் கலாட்டா செய்யும் பேர்வழிகள்’ அல்லோம், சில சமயம் மாலை வேலைகளில் ஏதோ பிரச்சினையை அலசிச் சிரித்து மகிழ்வோம். வீட்டுக்குரி யோர் அடிக்கடித் தின்னைப்பள்ளி ஆசிரியர்போல் இதோபதேசம் செய்வார்; கடிந்து கொள்வார். இளம் வயதில் கல்லூரி மாணவர்கள் இப்படித்தான் இருப்பார் என்ற உளவியல் உண்மையை அறியாதவர். அவர் இதோப தேசத்தை நாங்கள் காதில் வாங்குவதே இல்லை. அவரு டைய வியப்பான போக்கு (Queer behaviour) எங்கட்கு நகைச்சுவை அளிக்கும். இதையே சில சமயம் பிரச்சினை யாகக் கொண்டு சிரித்து மகிழ்வோம். மார்ச்சு மாதம்; தேர்வு சமயம் எங்கள் பத்துப் பேருக்கும் தனித்தனியாக அறையை உடனே காலி செய்யுமாறு வக்கீல் நோட்டிஸ் அனுப்பினார். இதிலிருந்தே அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. தேர்வு சமயத்தில் எங்கள் மனநிலை அதிர்ந்தது. இந்நிலையில் எப்படி அமைதியாகப் படிக்க முடியும்? நாங்கள் பத்து பேரும் நோட்டீசுகளை எடுத்துக் கொண்டு கல்லூரி முதல்வர் ஜெரோம் டி செளசாவைச் சந்தித்து அதிர்ச்சியடைந்த முகத்துடன் எங்கள் நிலையை விளக்கினோம் நிலைமை யைப் புரிந்து கொண்ட தந்தையனைய முதல்வர், மாணவர்களே, கவலை வேண்டா. இதற்கு வழி காண் பேன்’ என்று எங்களைச் சாந்தப்படுத் தினர். எங்களிட மிருந்து நோட்டீசுகளைப் பெற்றுக்கொண்டு அவற்றைத்