பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மலரும் நினைவுகள் தம் கடிதத்துடன் கல்லூரித் தலைமை எழுத்தர் மூலம் ஆண்டார் தெருவில் வசித்து வந்த கல்லூரி வக்கீல், திரு பி.எஸ்.கிருட்டிணமூர்த்தி அய்யரிடம் அனுப்பிப் பதில் நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடு செய்து, நோட்டீசும் அனுப்பப் பெற்றது. வீட்டுக்காரர் பெட்டிப்பாம்புபோல் அடங்கி விட்டார். எங்கள்மீது, முதல்வர் கொண்ட பரிவை இன்றும் நினைந்து மகிழ முடிகின்றது; வியக்கவும் செய்கின்றது . நினைவு-4 : 1939-40 ஆம் ஆண்டு உத்தியோக வேட்டையிலேயே கழிந்தது. 1940-1941 ஆம் ஆண்டு சைதாப்பேட்டை ஆசிரியர்க் கல்லூரியில் பயிற்சி பெறுவ தில் கழிந்தது. 1941-ஆம் ஆண்டு புதிதாகத் தொடங்கப் பெற்ற துறையூர் பெருநிலக்கிழவர் நடுநிலைப் பள்ளியின் முதல் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்று இரண் டாண்டுகளில் பெரும்பாலும் என் சொந்த முயற்சியால் அதை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தினேன். பள்ளி வளர்ச்சியில் என் முயற்சிகள் யாவும் இறையருளால் பயன் விளைத்தன. அளவற்ற புகழும் என்மீது வந்து குவிந்தது. தமிழ் எம்.ஏ. படிக்க முயற்சிகள் எடுத்தேன். பழைய விதிப்படி பி. எஸ் சி பட்டம் பெற்றவர்கள் (பகுதி-2தமிழ் படிக்காததால்) நேராக எம்.ஏ செல்ல அனுமதிக்கப் பெற வில்லை. ஆதலால் அதனைக் கைவிட்டு தமிழ் வித்துவான் தேர்வில் முதல் நிலைத் தேர்வை 1944லும், இறுதி நிலைத் தேர்வை 1945லும் எழுதி வெற்றி பெற்றேன். ஆனால் தமிழ் எம். ஏ. பட்டம் பெற முடியவில்லையே என்ற ஏக்கம் என் மனத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது. மீண்டும் 1945 இல் இம் முயற்சியைத் தொடங்கினேன். இப்போது ஆசிரியர்க்குரிய சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு பி.ஏ. தேர்வு எழுத இசைவு கோரி சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பம் அனுப்பினேன். இசைவு மறுக்கப் பெற்றது. பள்ளியிறுதித்தேர்வு முடித்து இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் மூன்றாண்டு