பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைத் திரு. எஸ். ஜெரோம் டி. செளசா 3 I ஆசிரியப் பணி புரிந்த அநுபவம் பெற்றிருந்தால் படிப்படி யாகத் தேர்வுகள் எழுதி பி. ஏ. பட்டம் பெறலாம் என்ற விதி இருந்தது. இந்த விதியைப் பயன் படுத்திக் கொள்ள எனக்கு உரிமையிருப்பதாகக் கருதிதான் விண்ணப்பம் அனுப்பினேன். மீண்டும் எழுதிக் கேட்டதற்கு ஏற்கெனவே ஒரு பட்டம் பெற்றவர்களை அனுமதிப்பதில்லை என்று மறுமொழி வந்தது. 1945இல் மாவட்டக் கல்வி அதிகாரிகளைத் தேர்ந் தெடுப்பதில் 25 விழுக்காடு இடங்கள் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கட்காக ஒதுக்கப் பெற்றிருந்தன. குறைந்தபட்சத் தகுதி எம். ஏ பட்டத்துடன் பி. டி. பட்டமும் பெற்றிருக்க வேண்டும். 1937 இல் நான் கோரிய படி பி.எஸ் சி (ஆனர்சு) படிக்க முதல்வர் அனுமதி வாங்கி யிருந்தால் இப்போது விண்ணப்பம் அனுப்புவதில் தடை இருக்காதே என்று கருதினேன். இப்போது தந்தை ஜெரோம் டி செளசா சென்னை லயோலா கல்லூரிக்கு முதல்வராக் மாற்றப் பட்டிருந்தார். என் நிலையை விளக்கி அவருக்கு எழுதினேன்; நேரிலும் கண்டு பேசி னேன். இவரைத் தவிர சட்டக்கல்லூரித் துணை முதல்வர் திரு எஸ். கோவிந்த ராஜுலு நாயுடு, ஜஸ்டிஸ் பவrர் அகமது (இவர்கள் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவில் செல்வாக்கு மிக்க உறுப்பினர்கள்) ஆகியோரை நேரில் சந்தித்து எம். ஏ. தேர்வு எழுத வழி வகுக்குமாறு வேண்டினேன். தந்தை ஜெரோம் டி செளசா இதனை முக்கியப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு முயன்றார். இது பதினேழு ஆட்சிக் குழு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்று இழுபறியாகக் கிடப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். 1947இல் நாடு சுதந்தரம் பெறுவதற்கு முன்பதாக விதி மாற்றப் பெற்றுப் புதுவிதி நடைமுறைக்கு வந்தது. இதன்படி பிஎஸ்சி பட்டம் பெற்றோர் பி. ஏ. பி.ஓ. எல், பிகாம் தேர்வுகள் எழுதலாம் என்றும்; அங்ங்னமே பி. ஏ. பட்டம் பெற்றோர். பி. எஸ்சி;