பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛器 மலரும் நினைவுகள் பி. ஒ.எல் பி.காம் தேர்வுகள் எழுதலாம் என்றும், பி. ஒ. எல் பட்டம் பெற்றோர் பி எஸ்சி, பி. ஏ. தேர்வுகள் எழுதலாம் என்று வழி அமைந்தது. 1947 இல் நான் பி.ஏ. ஆங்கிலம் (முதற்பகுதி): பி. ஏ. தமிழ் (இரண்டாம் பகுதி) தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றேன். பி.ஏ. பகுதி மூன்றுக்கு விதிவிலக்கு அளிக்கப் பெற்றது. ஆனால் 1951-இல் எம். ஏ. தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். 1950-இல் துறையூர் தலைமையாசிரியர் பதவியைத் துறந்து காரைக்குடி அழகப்பா ஆசிரியர்க் கல்லுரரியில் தமிழ்ப் பேராசிரியர் துறைத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். இதற்கிடையில் தந்தை ஜெரோம் டி. செளகா அவர்கள் இந்திய அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்றார். போப்பாண்டவருக்குத் தனிச் செயலராகப் பணியாற்றும் பொறுப்பு பெற்றும் உலகப்புகழ் பெற்றார். 1951 சென்னைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாப் பேருரையாற்றினார். இவரைப் பார்த்து ஆசிபெற வேண்டுமென்றே நேரில் பட்டம் பெற விழைந்து காரைக் குடியிலிருந்து சென்னை வந்தேன். மறுநாள் காலை லயோலா கல்லூரி வளாகத்திலுள்ள பாதிரியார் மாளிகை யில் சந்தித்து அவா வாழ்த்தையும் ஆசியையும் பெற்றேன். அதன் பிறகு அவரை நேரில் காணும் பேறு பெறவில்லை. 1977-செப்டம்பரில் திருப்பதியில் நடைபெற்ற என் மணி விழாவையொட்டி வெளியிடப் பெற்ற மணிவிழாமலருக்கு அனுப்பிய ஆசிச்செய்தி : மலர் ஆசிரியர்களுள் ஒருவரான டாக்டர் P. செளரிராஜனுக்கு எழுதியது: * அன்பு நிறைந்த டாக்டர் செளரிராஜனுக்கு, டாக்டர் சுப்பு ரெட்டியாரின் மணிவிழா மலருக்கு கட்டுரையொன்று. வழங்குமாறு கேட்டதற்கு மிகவும் நன்றி, என் உடல் நலக் கேட்டின் காரணமாக ஆய்வும் கவனமும் கொண்டு கட்டுரை எழுதும் திலையில் நான் இல்லாததற்கு மிகவும் வருந்துகின்றேன். நான் டாக்டர் சுப்புரெட்டியாருக்கு