பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறை திரு எஸ். ஜெரோம் டி செளசா 3 என் உண்மையான பாராட்டுதல்களையும் நல்வாழ்த்து களையும் வழங்கி மகிழ்கின்றேன், இந்த நல்வாழ்த்துகளை பேராசிரியர் சுப்புரெட்டியாருக்குத் தெரிவித்தருள்க. பேராசிரியர் ரெட்டியாரை மிகப் புகழ் பெற்ற என் பழைய மாணவர்களில் ஒருவராகக் கருதுகின்றேன். இந்த மலர் வெளியீட்டைக் காண ஆவலுடன் காத்திருப்பேன். மலர் கிட்டியதும் மிக்க மகிழ்ச்சியுடன் படிப்பேன்." சில ஆண்டுகள் கழித்து அவர் திருநாடு அலங்கரித்த செய்தியைத்தான் செய்தித்தாள்களில் கண்டேன்; வருந்தி னேன்.