பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பன்மொழிப்புலவர் வே. வேங்கடராஜூலு ரெட்டியார் 'மயிலைத் தொல்காப்பியர்' என வழங்கும் பன்மொழிப் புலவர் திரு.வே. வேங்கடராஜுலு ரெட்டியார் அவர்களுடன் 1948 முதல் 1968 வரை (இவர் மறையும் வரை) நெருங்கிப் பழகும் பேறு பெற்றவன் அடியேன். திரு. ரெட்டியார் அவர்கள் தொல்காப்பியம் என்ற இலக்கண நூலையும் பிற இலக்கண நூல்களையும் பழுதற வோதிக் கற்ற மாபெரும் இலக்கணப்புலவர். இலக்கண ஆசிரியர்களின் உண்மைக் கருத்தை நன்கு அறிந்தவர். பருந்தும் அதன் நிழலும்போலும் இணைந்துகற்றவர் என்று சொல்லி வைக்கலாம், சற்றேறக்குறைய இருபதுயாண்டு கள் இவருடன் நெருங்கிப்பழகும் பேறு பெற்றவனாதலால் இவர் தொடர்புடைய சில நிகழ்ச்சிகளை மலரும் நினைவு களாக ஈண்டுக் குறிப்பிடுகின்றேன். முதல் சந்திப்பு : நான் துறையூர் உயர் நிலைப் பள்ளித் தலைமையாசிரியனாகப் பணி புரிந்த காலத்தில் (1941-50) யாதோ ஒர் அலுவல் நிமித்தம் சென்னை வந்தேன்; இது 1943 என்பதாக நினைவு. டாக்டர் ஜான்சனைப் பாஸ்வெல் முதலில் சந்தித்ததுபோல் இவர் வாழ்ந்த இல்ல முகவரியை உசாவி யறிந்துகொண்டு (12, நாட்டு சுப்பராய மூத்தை தெரு, மயிலை) இவரை இல்லத்தில் சந்தித்தேன். ஒல்லியான திருமேனி: அடக்க