பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப ன் மொழிப்புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் 4.57 பெற முடியாமல் போய்விட்டது. ஒதுங்கி ஒதுங்கிப் போய்க் கொண்டிருப்பவரை அழைக்க என் மனமும் ஒருப் படவில்லை. இஃதுஅவரை உபசரிக்க எனக்கு ஊழ் இல்லை போலும் என்பதாகவே நான் நினைத்துக் கொண்டேன். 1974-இல் என நினைக்கின்றேன். டாக்டர் சஞ்சீவியும் நானும் ஒரு மூதறிஞர் குழு ஒன்றில் மதுரைப் பல்கலைக் கழகத்தில் (அழகர் கோயில் சாலையில் உள்ள பகுதி) கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அதற்கு அருகி லுள்ள குடியிருப்பிலுள்ள இல்லமொன்றில் டாக்டர் சண்முகம் (தெ. பொ. மீ.யின் மருகர்) வாழ்ந்து வந்தார். அவர் இல்லத்தில் தெ. பொ. மீ. தங்கியிருந்ததை அறிந்து நாங்கள் இருவரும் மரியாதைக்காக அவரைச் சந்தித்துப் பேசினோம். அக்காலத்தில்.தெ.பொ.மீ. ஆறுமாதகாலம் ஆழ்நிலை தியானத்தில் பயிற்சி பெற்று அப்பணியில் இறங்கி இருந்தார். அவருடைய இறுதிக்காலம் வரையில் அப்பணி யில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததை அறிந்தேன். அதன் பிறகு சென்னையில் சில கூட்டங்களில் அவரைச் சந்தித்து உரையாடியதுண்டு, பின்னர் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் என் காதிற்கு எட்டியது; மருத்துவமனையிலிருந்து வெளி வந்ததையும் அறிந்தேன். சில திங்களில் அவர் திருநாடு அலங்கரித்த செய்தியும் எனக்கு எட்டியது. மிகவும் வருந்தினேன். விரோதிகளிடமும் மனம் கலந்து பழகும் இயல்பினை இறைவன் எனக்கு அளித்துள்ளான். காரைக் குடியிலிருந்து என்னிடம் மிக அன்பாகப் பழகி வந்த இப்பெருமகனாரிடம் எந்தவித உதவியையும் பெற முடியாமல் போனது எனது தீயூழே என்பதை நினைத்து நினைந்து வருந்துகின்றேன். தெ.பொ. மீ.யின் ஆணவ மலத்தின் செயற்பாடே இவ்வளவுக்கும் காரணம் என்று கூட என் மனம் எண்ணத் தொடங்குகின்றது. என் வாழ்வில் எந்தப் பெரியவரின் உதவியையும் பெறமுடியாமல் செய்தவன் இறைவனே என்பதைச் சிந்திக்கின்றேன்.