பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மலரும் நினைவுகள் அந்த விடுதியின் அருகில் உள்ள ஓர் இல்லத்தில் ஒய்வு பெற்ற தெ. பொ. மீ. அவருடைய மகனுடன் (இவர் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்) தங்கியிருந்தார். இதைக் கேள்விப்பட்டு அவரை மரியாதைக்காகப் பார்க்கச் சென்றேன். என்னுடன் வழக்கமாக உற்சாகமாக உரையாடும் பாங்கு அவரிடம் காணப்படவில்லை. 'உம்மா மூஞ்சி"யுடன் இருந்தார். இடையில் உங்கள் துணைவேந்தர் நல்லவர்; நேர்மை தவறாதவர்' என்று ஒரு Gurੋ த பேசினார். பின்னர் காஃபி வழங்கச் செய் தார். யாருக்கோ உதவுவதற்காக எனக்கு அளவுக்கு மீறின. கொடுமை இழைத்ததற்காக வருந்தியிருக்க வேண்டும் என்று எனக்குப் பட்டது. நன்றி செலுத்தி விடை பெற்றுத் திரும்பினேன். 1972-என்பதாக நினைவு கேரள திராவிட மொழி யியல் மையத்தின் ஆதரவில் ஓராண்டு உதவித் தொகை ஏற்பாட்டுடன் (Fellowship ஆய்வாளர் பொறுப்பேற்று அப்பணியைத் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். நூலகக் கட்டடத்தில் அவருக்கு இடம் தரப் பெற்றிருந்தது. உணவுக்கு மகளிர் விடுதியிலும் தங்கு வதற்கு மகளிர் விடுதியிலுள்ள விருந்தினர் மாளிகையிலும் ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. நான் மரியாதைக்காக அவரை நூலகக் கட்டடத்தில் சந்தித்துப் பேசி மகிழ்ந் தேன். இயல்பான கலகலப்பு அவர் என்னிடம் காட்ட வில்லை. அடிக்கடித் தெலுங்குத் துறைக்கு வந்து போவ துண்டு. ஒரு நாள் கூட தமிழ்த் துறையை எட்டிப் பார்க்கக் கூட இல்லை. ஏதோ எனக்குத் தவறிழைத்ததை நினைத் துக் கொண்டு நாணப்படுவதாக எனக்குப் பட்டது. நான் நேரில் வழியில் கண்ட போதெல்லாம் வாய்விட்டுப் பேசும் போது எனக்கு இது தெளிவாயிற்று கூடிய வரை ஒதுங்கி யிருக்கநினைப்பதாகவேகுறிப்பினால் அறிந்துகொண்டேன். துறை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செய்வதும் என் இல்லத்திற்கு விருந்தினராக அழைக்க நினைத்ததும் நடை