பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப்புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார். 455 வாசிப்பதற்காக அல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்பு கின்றேன். எய்தவ னிருக்க அம்பை நோவதால் பயன் ஒன்றும் இல்லை. தெ. பொ. மீ. இவ்வளவு கடுமையாக நடந்து கொள்ளக் காரணம் என்ன? என் மனத்திற்குத் தோன்று வது இது: விளம்பரப்படி ஒருவரும் விண்ணப்பிக்காததால் துணைவேந்தர் டாக்டர் D. ஜகந்நாத ரெட்டி பேராசிரி யருக்குத் தக்கார் சிலரது பெயர்களைப்பரிந்துரைக்கும்படி சென்னை, அண்ணாமலை, மதுரைப் பல்கலைக் கழகங் களின் துணைவேந்தர்கட்கு எழுதியிருந்தார். சென்னைத் துணைவேந்தர் தக்கவர் எவரும் இல்லையென்று செப்பி விட்டார்; அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் தக்கவர் இல்லை என்று கைவிரித்து விட்டார். மதுரைத் துணைவேந்தர் மட்டிலும் (தெ. பொ. மீ) 1. டாக்டர் தா. ஏ. ஞானமூர்த்தி, 2. டாக்டர் மொ. அ. துரைஅரங்கனார். 3 . பேராசிரியர் அ. ச. ஞான சம்பந்தம், 4. டாக்டர் K. ஆறுமுகம் இவர்கள் பெயர் களைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். இவர்களைப் பற்றிய 'ஆதியும் அந்தமும் இல்லாததால் டாக்டர் D. ஜகந்நாத ரெட்டி என்னைக் கூப்பிட்டுக் கேட்டதால் இவர்களைப் பற்றிய விவரங்களைத் தந்தேன். இதனால் டாக்டர்ரெட்டி யின் மனத்தில் அழுக்கு இல்லை என்பது தெளிவாயிற்று. நான் திருப்பதியிலிருக்கும்போது என்னை டாக்டர் ரெட்டி விரும்பவில்லையோ? அல்லது வெறுத்தாரோ? என்று தெ. பொ. மீ. தவறாகக் கொண்ட எண்ணமே எனக்கு விரோதமாக நடந்து கொண்டதற்குக் காரண மாக இருக்கலாமோ? இப்படி என் மனம் எண்ணு கின்றது. 1970-இல் கோவை பு. சா. கோ. பொறியியல் கல்லூரியில் என் மகன் இராமலிங்கத்தை எம். எஸ்சியில் சேர்க்கச் சென்றிருந்தேன். அவன் தங்கியிருந்த மாணவர் விடுதியில் நானும் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன்.