பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 மலரும் நினைவுகள் நான் : ஐயா, அஃது உங்களுக்காகப் பரிதாபப்பட்டு: இறங்கினேன்.ஆனால் அறுபது அடிகள் என்றே வற்புறுத்து வேன்; இடைச் செருகல் என்பதையும் நிலை நாட்டு வேன். இத்துடன் வினாக்கள் விடுப்பது நின்றது. பேட்டியும் நின்றது. ஒரு பேராசிரியர் நியமனத்திற்காக நடைபெற்ற பேட்டியில் வல்லுநர் விடுக்கும் வினாக்களா இ ைவ? இன்னொரு வல்லுநர் விடுத்த வினாக்களையும் இப்பெரு மகன் விடுத்த வினாக்களையும் சீர்தூக்கிப் பார்த்தால் மலை யனைய வேற்றுமையைக் காணலாம். நானும் பல பேட்டிகட்குச் சென்றிருக்கின்றேன்.சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பேட்டியொன்றில் இப்படித்தான் தாறுமாறாக ஒருவர் என்னைக் கேட்டார். அவர் மூக்கு உடையுமாறு பதில் விடுத்தேன். இதற்குள் துணைவேந்தர் ஏ. எல். முதலியார் குறுக்கிட்டு, பொருத்த மற்ற வினாக்களை விடுத்து திரு. ரெட்டியாரைச் சீண்டாதீர் கள். என்று தடை போட்டு ரசாபாசம் நேரிடாதவாறு: தடுத்து நிறுத்திவிட்டார். நானும் சென்னை, கேரளம், மதுரைப் பல்கலைக் கழகங்களில் கூட்டப் பெற்ற வல்லுநர் குழுவில் இடம் பெற்றுப் பணியாற்றியவன்தான். என்னுடன் பல வல்லுநர்கள் வந்திருந்தனர். ஒருவராவது இங்ங்னம் கீழ்த்தரமாக வினாக்கள் விடுத்ததில்லை.அவர்கள் விடுத்த வினாக்கள் அந்தந்த விண்ணப்பதாரர்களின் படிப்பு, பணி, அநுபவத்தையொட்டிப் பெருமிதமாகவே அமைந்திருந்: தன . முப்பது ஆண்டுகள் கல்லுரரியிலும் பல்கலைக் கழகத் திலும் அநுபவம் பெற்று ஐம்பத்திரண்டு அகவை நிறைந்த என் வாழ்வில் இப்படி ஒரு நேர்வு அமைந்தது என்னுடைய தீயூழே; போதாக் காலமே. கடந்த கால நிகழ்ச்சியை நடந்தது நடந்தவாறே எண்ணிப் பார்த்துப் பதிவு செய்: தேனேயன்றி தெ. பொ. மீ. யின் மீது குற்றப் பத்திரிகை