பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யூதுர் மகாவித்துவான் கி. வேங்கடசாமிரெட்டியார் 467 மலைத் தொடர்கள், பொறுக்கமுடியாத வெப்பத்துடன் கூடிய காடுகள், சுவடுகள் இவற்றுடன் கூடிய குன்றுகள், சிறுகுன்றுகள் அடங்கிய பகுதியேசங்கநூல்களில்குறிப்பிடப் பெறும் வேங்கடமாகும். இப்பகுதி மேற்குக் கடற்கரை யிலிருந்து கிழக்குக் கடற்கரைவரை தொடர்பு அறாத வட எல்லையாக அமைந்திருப்பதால் அது "வடவேங்கடம், என்ற பெயருடன் வழங்கிற்று. தொல்காப்பியப் பாயிர மாக அமைந்த "வடவேங்கடம் தென்குமரி எனத் தொடங்கும் பனம்பாரனார் நூற்பாவில் குறிப்பிடப் பெற்றுள்ள வடவேங்கடமும் ஏனைய சங்க நூல்களில் குறிப்பிடப்பெற்றுள்ள வேங்கடமும் இப்பகுதியையே குறிக்கின்றது என்று உறுதிப்படுத்தலாம். மற்றும், "வேங்கடம்' என்ற பகுதி கிழக்குக் கடற்கரையின் அருகில் திருப்பதி மலையிலிருந்து தொடங்குகின்றது என்பது திருப்பதி மலைக்கு வேங்கடம்’ என்ற பெயர் அமைந் திருத்தலே ஒரு சான்றாக அமைகின்றது. சங்க இலக்கியங் களில் வெப்பம் மிக்க பகுதியாகக் குறிப்பிடப் பெறும் வேங்கடத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது அப்பகுதியின் ஒரத்திலோ இம்மலை இருந்திராவிடில் சிறந்த தமிழறிஞர் களாகத் திகழ்ந்த முதலாழ்வார்கள் இம்மலையை வேங்கடம்’ என்று வழங்கியிரார். இவர்கள் பாடல்களில் சங்க இலக்கியச் சாயலும் நெறியும் நிழலிடுவதை நாம் அறிவோம். அன்றியும், நீண்ட பகுதியை எல்லையாகக் கொள்ளப்படுவதேயன்றி திருப்பதி மலை போன்ற சிறு மலையை எல்லையாகக் கொள்ள முடியாது என்ற கருத் தையும் நாம் சிந்திக்க வேண்டும்.’’ அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த திரு ரெட்டியார் இக்கருத்துகளை ஒப்புக் கொண்டு என் ஆய்வுத் திறனை வியந்து பாராட்டினார் கள். அவர்களிடமும் ஆழ்வார்களின் தத்துவம் பற்றிய பல குறிப்புகளைத் தெரிந்து கொண்டேன். இப்படியாக விழுப்புர இருப்பூர்தி நிலையத்தில் மேல்வகுப்புப் பயணி கள் தங்கும் அறையில் எங்கள் தமிழ், சமய ஆய்வுகள் பற்றிய சல்லாபங்கள் ஆறு ஆண்டுகள் நடைபெற்றன.