பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 Ꮾ & மலரும் நினைவுகள் இன்னும் எத்தனையோ செய்திகளை நினைவுகூர முடிய வில்லை. திருமலையில் 18-8-1971ல் உறவினர்கள், நண்பர்கள், புலவர்கள் பெரியோர்கள் அடங்கிய குழுவினர் இவரது மணிவிழாவைக் கொண்டாடினர். சிறந்த வைணவ அடியார் ஒருவரின் மணிவிழா ஏழுமலையான் திருக் கோயில் கொண்டுள்ள திருமலையில் கொண்டாடுவதற்கு என்ன தவம் செய்திருக்க வேண்டும்? என்று நினைத்துக் கொண்டேன். இந்த ஏற்பாட்டிற்கு-பெரிய குடிசை (Big Cottage) ஒதுக்கீடு செய்வது முதல் பிற செயல்கள் நடைபெறுவது வரை-அடியேனும் இவர்தம் கிருஷ்ணா புரம் சம்பந்தி ரெட்டியாரும் திருமலை-திருப்பதிதேவஸ் தான அலுவலகத்திற்குப் பல முறை சென்று முயன்றதை இப்போது நினைவுகூர்கின்றேன். இத்தகைய ஏற்பாடு களை முன்னின்று செய்வதில்-திறமையாகச் செய்வதில் ட கிருஷ்ணாபுரம் ரெட்டியாருக்கு நிகர் அவரே என்பதை யும் நினைக்கின்றேன். 1970-ஆம் ஆண்டில் தமிழ் எம். ஏ. வகுப்புகளும் பிஎச். டி. ஆய்வு வசதிகளுடன் தொடங்கப் பெற்றன . இதன் பிறகு திருப்பதிக்கு திரு. ரெட்டியார் அடிக்கடி வரவும் வாய்ப்புகள் ஏற்பட்டன. 1974-இல் தமிழ்த்துறை யின் முதல் கருத்தரங்காக திருக்குறள் கருத்தரங்கு நடை. பெற்றது. அதில் ஒர் அமர்வு வள்ளுவரும் சமயமும்’ என்ற தலைப்பில் சைவம், வைணவம், பெளத்தமும் சமணமும், இஸ்லாம், கிறித்தவம் என்ற தலைப்புகளில் ஐந்து அறிஞர்கள் ஆய்வுக்கட்டுரைகள் படித்தனர். வைணவம்பற்றிய திரு ரெட்டியாரின் கட்டுரை அனைவர் கவனத்தையும் கவர்ந்தது. மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை, என் நோற்றான் கொல் எனும் சொல் (70) என்ற குறள் பெரியாழ்வார் திருமொழியில்,