பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூதூர் மகாவித்துவான் கி. வேங்கடசாமி ரெட்டியார் 469 என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வார்த்தை எய்துவித்த இருடிகேசா முலையுனாயே 2: 3: I 0 என்று வேறு வகையில் வருவதைக் காட்டினது அனைவர் கவனத்தையும் கவர்ந்தது. வருகிற ஆண்டுகளில் நடை பெற்ற சிலப்பதிகாரக் கருத்தரங்கு, கம்பராமாயணக் கருத்தரங்கு ஆகியவற்றில் பங்கு பெற்று சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி அறிஞர்களின் கவனத்தை ஈர்த் தாா. இந்தக் காலத்தில் ஒருமுறை பண்ணுருட்டி வைணவ சபையில் எனக்குப்பேச வாய்ப்பிருந்தது. என்ன பேசினேன் என்பது நினைவு இல்லை. ஆனால் திருப்பதி நண்பர் சதாசிவ ரெட்டி (தெலுங்குப் பேராசிரியரை) இந்தச் சபைக்கு இட்டுச் சென்று எளிய தெலுங்கில் பேச வைத்தேன். அப்பக்கத்து ரெட்டிகுலப் பெருமக்கள் தெலுங்குச் சொற்பொழிவு கேட்க விரும்பினார்கள். திரு சதாசிவ ரெட்டியின் தெலுங்குப் பேச்சு பெரும்பாலோ ருக்குத் தெளிவாக விளங்கியதாகக் கேட்டு மகிழ்ந்தேன். இவர் கிராமியத் தெலுங்கில் உரையாற்றும் பழக்கமுடை யவர். வடமொழி அதிகமாகக் கலந்த பண்டிதத் தெலுங் கிலும் உரையாற்றுவார். என்னுடைய மணிவிழாவில் (செப்டம்பர் 1977) இந்தத் தெலுங்கில் பேசி அனைவரை யும் மகிழ்வித்தார். பண்ணுருட்டி வைணவ சபை பொன்னாடை போர்த்தி சன்மானம் வழங்கி இவரைப் பெருமைப்படுத்தியது. இதற்கு மூலகாரணமாக இருந்தவர் நம் பூதூர் சுவாமிகளே என்பதை நினைவுகூர்கின்றேன். 1976- ஆகஸ்டில் என் மணிவிழா நடைபெறும் நாள். இதனைத்திருமலையில் நான்பிறந்தநட்சத்திரத்தில் இறைவ லுக்குக் கல்யாண உற்சவம் செய்து வைத்து மனநிறைவு