பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7) மலரும் நினைவுகள் பெற்றேன். 1977 செப்டம்பரில் தமிழ்த்துறையில் என் செலவில் என் மணிவிழா சிறிய அளவில் நடை பெற்றது. விழாவிற்கு திரு. எம். அனந்த சயனம் அய்யங்கார் அவர்கள் தலைமை வகித்தார்கள். தமிழகத்திலுள்ள மடாதிபதிகள், பல்கலைக்கழக மானிய ஆணையத்தலைவர் துணைத்தலைவர், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், திருவேங்கடவன் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், என் ஆசிரியர்கள், மேல் நீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசியல் தலைவர்கள், உயர் நிலைப்பள்ளியில் என்னுடன் பணியாற்றியவர்கள், என் நண்பர்கள்- என்பால் நல்லெண்ணம் கொண்டவர்கள், திருவேங்கடவன் பல்கலைக்கழகப் பேராசிரியத் தோழர்கள், பிற பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், என் முன்னாள்-இன்றைய மாணவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்திகள் அடங்கிய மலர் வெளியிடப் பெறறது. இம்மலரில் திருரெட்டியார் அவர்கள் என்னை வாழ்த்திய பாடல்கள். உழைப்பதனால் மிகஉயர்ந்தோன் யார்க்கும் நல்லோன்; உண்மையுணர் நன்னெஞ்சன்; உணர்ச்சி மிக்கான்; அழைப்பு:விடு மாநிலங்கள் பலவும் சென்றோன்; ஆழ்வார்கள் கருத்துணர்ந்தோன்; அயர்வே இல்லான்; தழைப்பவரு சமயவேற் றுமைகா ணாதான்; தண்டமிழும் ஆங்கிலமும் தேர்ந்த ஞானி; மழைப்பருவம் கண்டமயில் இனம்போல அன்பர் மகிழவரு சுப்புரெட்டி என்பான் மன்னோ இலக்கியமா? இலக்கணமா? இயல்விஞ் ஞான எழிற் கலையா? உளநூலா? எதிலும் வல்லான்; கலக்கமிலா தாராய்ச்சி முடிவு காட்டிக் களிப்புறுவோன்; அறிஞரெலாம் கருத வாழ்வோன்;