பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 மலரும் நினைவுகள் பெறவும் முடிந்தது. இக்காலத்தில் இவர் நோய்வாய்ப் பட்டுத் துடித்தது எனக்குத் தீரா வருத்தமாக இருந்தது. எனக்கு எழுதிய பல கடிதங்களிலும் நேரிலும் மரணத் திற்கு அஞ்சேன்’ என்று எழுதுவார். இன்னொரு கடிதத் தில், கூவிக்கூவிக் கொடுவினை துாற்றுள் நின்று பாவியேன் பலகாலம் வழிதிகைத்து அலமர்கின்றேன்’ என்று எழுதுவார். திருவாய்மொழியில் என்ன ஈடுபாடு? துன்புற்ற நிலையிலும் அதற்கேற்ற திருவாய்மொழிப் பாசுரத்தை நினைந்து உருகி எழுதுவதை என்னை வியக்க வைத்தது. கூப்பீடு கேட்டு இரங்கி எடுப்பதாக ஈசுவரன் கை நீட்டினால், நீட்டினகை வாங்கவொண்ணாத நிலத் திலே யிற்றுக்கிடப்பது” என்ற ஈட்டின் பூரீசூக்தியை நினைந்து மேலும் உருகிப் போனேன். மரணத்தைத் தவிர்க்க முடியாது என்பதை யான் அறிவேன். ஆனால் இப்படி எம்பெருமான் இவரை நோயால் துன்புறுத்த வேண்டுமா? என்பதுவே என் கேள்வி. இக்காலத்தில் இவர் சென்னையிலும் கடலூரிலும் இருந்து கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தக் காலத்தில் வைணவ உரைவளம்’ என்ற எனது நூல் அச்சாகிக் கொண்டிருந்தது. பல அடிக்குறிப்புகட்கு மூலம் தெரியவில்லை. தெரிவிக்க வேண்டும் என்று கடிதம் எழுதி னால் உடனே பாசுர எண்களைத் தெரிவித்துக் கடிதம் வரும். நோயுற்ற நிலையிலும் நாலாயிரத்தைச் சேவித்துக் கொண்டிருந்தவர். இறுதியாக இராயப்பேட்டை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் திருநாட்டுக்கெழுந் தருளினார் (22. 12. 84இல்). 2. திருவரங், 3. 2 : 9,