பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதூர் மகாவித்துவான் கி. வேங்கடசாமி ரெட்டியார் 473 மயிலைத் தொல்காப்பியர் பன்மொழிப் புலவர் வேங்கடராஜூலு ரெட்டியாருக்குப் பிறகு இவர் அடியேனின் உடன் பிறவா அண்ணனாக இருந்துவந்தவர். தமிழ் வைணவக் களஞ்சியம்போல் இருந்து அடியேனுக்கு ஒல்லும் வகையெல்லாம் உதவி வந்தவர். என்றும் விஷ்ணு சித்தனாக, இருந்து வாழ்ந்தவர்; நிறைவாழ்வு வாழ்ந்தவர். எப்பொழுதும் திருமண்காப்புத் திகழும் திருமுகமண்டலத் துடனும் சட்டை போடாத பொன் மேனியுடனும் இவரைச் சேவிப்போர் வில்லிபூத்துரர்ப் பெரியாழ்வார் நினைவிற்கு வராமற் போகார். வைணவப் பெருமக்கள் இவரைப் பூதூர் சுவாமிகள் என்றே குறிப்பிடுவர். தமிழிலும் வைணவத்திலும் ஆழங்கால்பட்டு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை இருமுறை பதிப்பித்து எல்லையில்லாப் புகழ் பெற்ற இப்பெரியாருக்கு வைணவ உரைவளம்’ என்ற எனது நூலை , நன்னயஞ் சான்ற வுளத்தினை ஆழ்வார் நவின்றருள் மறைகளுக் களித்தும் பன்னரும் நுட்ப அறிவினைப் புலமைப் பாவலர் தங்களுக் களித்தும் பொன்னெனத் திகழும் ஒப்பிலா உயிரைப் பூரண நாரணற் களித்தும் மன்னிய புகழ்கொள் வேங்கட சாமி வள்ளலார்க் குரிய திந்நூலே. என்ற பாடல் மூலம் அன்புப் படையலாக்கி இதனை ஒரு பாகவத கைங்கரியமாகக் கருதி மனநிறைவு கொள்ளு கின்றேன். நித்தியசூரிகளுடனும் முக்தர்களுடனும் திவ்விய பிரபந்தக் காலட்சேபம் செய்து வருவார் என்றே எனக்குத் தோன்றுகின்றது. நம்மாழ்வாரின் முதல் பிரபந்தமாகிய திருவிருத்தத்திற்குத் தெளிவுரை கண்டவரல்லவா?