பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ரு M. அனந்தசயனம் அய்யங்கார் 475 விட்டுத் தனிமையாக வாழ்ந்து வந்தார். இவர் தமிழ் பேசும் வைணவர் : படித்தது தெலுங்கு மொழி. 1962- என நினைக்கின்றேன். திரு. நாராயணன் இருந்த வீட்டின் கீழ்ப் பகுதியில் இருந்த குடும்பத்தைக் காலி செய்யச் செய்து பழுது பார்க்கும் வேலை பரபரப் புடன் நடைபெற்று வந்தது. இல்லத்தின் முன்புறத்தில் மாற்றம், வெள்ளையடித்தல் முதலான வேலைகள் வேகமாக நடைபெற்று வந்தன. ஒருநாள் திரு. நாராயணனைச் சந்தித்தபோது வீட்டிற்குரிய திரு. அனந்தசயனம் அய்யங்கார் வரப் போகின்றார் என்ற செய்தியைத் தெரிவித்தார். அப்போதுதான் பீகார் மாநிலத்தின் ஆளுநர் பதவிக் காலம் முடிவுற்று திருப்பதிக் குத் திரும்புகின்றார் திரு. அய்யங்கார் சித்துாரில் வக்கீல் தொழிலை நடத்தி வந்த திரு. அய்யங்கார். அவர்கள் நாடு விடுதலை பெற்ற பிறகு நாடாளுமன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றுப் பத்தாண்டுகள் நாடாளுமன்ற சபாநாயகராக டில்லியில் வாழ்ந்தார்; தொடர்ந்து ஐந்தாண்டுகள் பீகார் மாநிலத்தின் ஆளுநராக நியமனம் பெற்று ஐந்தாண்டுக் காலம் பாட்னாவில் வாழ்ந்து பதினைந்து ஆண்டுக் காலம் வட நாட்டில் கழித்து முதன்முதலாகத் தென்னாடு திரும்பியவர் சித்துார் செல்லாது திருப்பதியிலேயே தங்குகின்றார் தம் சொந்த இல்லத்தில். ஒருநாள் திரு. நாராயணன் என்னைத் திரு. அய்யங் காரிடம் அறிமுகம் செய்து வைக்கின்றார். தமிழ்மொழி தான் எங்கள் இருவரையும் நன்கு பிணித்து வைத்தது. எடுத்த எடுப்பில், நான் பச்சைத் தமிழன்; பிழைப்பின் நிமித்தம் இருந்த இடத்திற்கேற்ப சூழ்நிலை என்னைத் தெலுங்கு படிக்கச் செய்தது. ஆனால் வீட்டில் பேசுவது தமிழ் . தமிழ் எங்கள் தாய்மொழி' என்றார். மீண்டும் என்னை நோக்கி, ரெட்டியார்வாள், நீங்கள் வீட்டில் தெலுங்கு பேசுவீர்கள் என நினைக்கின்றேன். தமிழ்