பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

쇼 7& மலரும் நினைவுகள் இராமன்மீது எவ்வளவோ பழியை ஏற்றிச் சொன்ன வாலிகூட இறுதியாக இராமனை மேலொரு பொருளு மில்லா மெய்ப் பொருள் என்று கொள்ளவில்லையா? என்று பேசுவார். இப்படியாக எங்கள் உரையாடல் நாட்டு நடப்பிலிருந்து தத்துவங்கள் வரை விரிந்து செல்லும். திருப்பதியில் நான் குடும்பக் கவலையை மறந்திருப் பதற்கு இவர்தம் உரையாடல் எனக்குப் பெருந்துணை செய்யும். 1966-ஜூனுக்குப்பிறகு என் குடும்பத்தைத் திருப்பதிக் குக் கொணர்ந்து விட்டேன். மூத்த மகனை பி. எஸ்சி வகுப்பிலும், இளையவனை நடுவரசுப் பொறுப்பில் நடை பெற்ற பள்ளியில் (Central School) எட்டாம் வகுப்பி லும் சேர்த்து விட்டேன். வாடகை வீடு கபில தீர்த்தம் சாலையிலுள்ள உமாபதி ரெட்டி குடியிருப்பு' என்ற இடத்தில் அமைந்தது. தொலைவு காரணமாக முன் போல் திரு அய்யங்காரைச் சந்திக்க முடியாமல் போய் விட்டாலும் திங்களுக்கு ஒரு தடவையாவது அப்பெரு மகனாரைச் சந்திப்பது தவறுவதில்லை. ஆனாலும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் மருத்துவமனைசாலைக் கருகில் ஒரு புதுவிடு கட்டிக்கொண்டு அங்குக் குடியேறி விட்டார். இந்தப் புதிய வீடு நான் பல்கலைக் கழகத்திற்குச் செல்லும் வழியிலிருந்ததால் என் மிதிவண்டியை அவர் இல்லத் திற்குத் திருப்பி ஒரு சில மணித்துளிகளாவது உரையாடிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். 1971-சனவரிவாக்கில்பல்கலைக்கழக வளாகத்திலேயே எனக்கு ஒர் இல்லம் கிடைத்தது. வீடும்பெரியது. வசதிகளும் அதிகம், நடையிலேயே பல்கலைக் கழகத்திற்கு வந்து திரும்பலாம். ஆனால் மிதிவண்டியில்தான் வந்துபோய்க் கொண்டிருந்தேன். என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த வருமானத்திற்குள் மிதிவண்டி ஊர்தியைத்தான் வைத்துக் கொள்ள முடிந்தது. இக்காலத்தில் மாதத்திற்கு ஒருமுறை