பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. M. அனந்தசயனம் அய்யங்கார் 479 யாவது திரு . அய்யங்காரைச் சந்திக்காமல்இருப்பதில்லை. 1970 ஜூன் முதல் தமிழ் முதுகலை வகுப்புகளும் பிஎச்.டி.க்கு ஆராயும் வாய்ப்புகளும் அமைந்து விட்டதால் ஒய்வு அதிகமாகக் கிடைப்பதில்லை . இதனால் திரு அய்யங்கார் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் குறைந்து விட்டன; சந்திப்புகளும் அரியனவாயின. 1974-இல் என் டாக்டர் பட்ட ஆய்வேடு அச்சேறியது. இதற்காக நான் மேற்கொண்ட முயற்சியைப் பன்னி யுரைக்கில் பாரதமாகும். இம்முயற்சிகள் டாக்டர் D. ஜகந்நாத ரெட்டி துணைவேந்தராக இருந்தபோது நடைபெற்றன. அப்போது என் அரிய நண்பர் திரு B. K. இராம சந்திரன் (பல்கலைக் கழக அச்சக இயக்குநர்) துணை கொண்டு விரைவாக அச்சக வேலையை முடித்தேன் (1976). அப்போது பேராசிரியர் எஸ். சச்சிதானந்த மூர்த்தி அவர்கள் துணைவேந்தர்; தத்துவப் பேராசிரியராக இருந்தவர். அவரிடம் ஒரு அணிந்துரை வாங்க நினைத்து அவரை அண்மி வேண்டி னேன். அவரும் வழங்குவதாக ஒப்புக் கொண்டார். இதற்கு ஒர் எதிர்ப்புச் சூழ்நிலை உருவானதால் தன் இயலாமையைத் தெரிவித்து விட்டார் துணைவேந்தர். பின்னர் வைணவ சீலர் திரு மாடபூசி அனந்த சயனம் அவர் களை நாடினேன், அப்போது மிகவும் தளர்ந்த நிலை; படுத்தே ஓய்வு கொண்டிருக்க வேண்டிய நிலையிலிருந் தார்.கண்ணொளியும் சரியாக இல்லை.990க்கு மேற்பட்ட பக்கங்களையுடையஆங்கில நூலை அவரால்படிக்க முடியாது என்பதை நான் உணர்ந்தேன். எனினும் சிறிது கூட மறுப்புச்சொல்லாது ஒப்புக் கொண்டார். ஒரு மாதகாலம் தினந்தோறும் மாலை 4-30க்கு மேல் வர வேண்டும் என்றும், ஒவ்வொரு இயலிலும்(32 இயல்கள் கொண்டது நூல்) முக்கியமான பகுதிகளைப் படித்துக் காட்டி அந்த இயலின் சுருக்கத்தையும் சொல்ல வேண்டும்