பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 0 மலரும் நினைவுகள் என்றும் பணித்தார். அங்ங்னமே நானும் அவர் இல்லம் சென்று படித்து வந்தேன். ஒரு ஞாயிறு அன்று மாலை மூன்று மணிக்கே வருமாறு பணித்தார். சுருக்கெழுத்து முறை தெரிந்த எழுத்தரையும் வருமாறு பணித்திருந்தார். இருவரும் சரியாக மூன்று மணிக்குத் தயாராக அவர் இல்லத்தில் இருந்தோம். எங்கட்குக் காஃபி பானம் வழங்கச் செய்து தானும் அருத்தினார். பிறகு அணிந்துரை யைச் சொல்லத் தொடங்கினார். கடல் மடை திறந்தது. போன்று ஆங்கில வாசகம் அவர் திருவாயினின்றும் புறப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் மெதுவாகச் சொன்னார். பின்னர் தட்டச்சு செய்யச் சொல்லிவிட்டு ஓய்வாகப் படுத்துக் கொண்டார். ஒரு மணி நேரத்தில் மிக அழகாக மூன்று படிகளைத் தயாரித்து விட்டார் தட்டச்சு செய்த அன்பர். பின்னர் எழுந்து வந்து தட்டச்சு செய்திருந்த ஏழு பக்கங்களைப் படிக்கச் சொல்லி கவனமாகக் கேட்டார். திருப்திதானே' என்றார். உணர்ச்சிப் பெருக்கில் திளைத்த என்னால் நிலை கொள்ள முடியவில்லை. தழுதழுத்த குரலில் "ஆம்" என்றேன். மூன்றிலும் கையெழுத்திட்டு மூன்றாவது படியைத் தாம் வைத்துக் கொண்டு முதலிரண்டு படிகளையும் என்னிடம் தந்து ஆசி கூறி அனுப்பினார். இந்தக் காட்சியை என்னால் இன்றளவும் மறக்க முடியவில்லை; பசுமை யாகவே உள்ளது. தமது அணிந்துரையில் என்னுடைய முயற்சியால்தான் தமிழ்த்துறை வளர்ந்தது என்றும், இத்துறையைக் கண்ணெனப் பாதுகாத்து வருகின்றேன் என்றும், பல்வேறு துறைகளில் பல நூல்கள் எழுதி வெளியிட்டுப் பெரும்புகழ் பெற்றுள்ளேன் என்றும். என்னுடைய தமிழ்நடை தெளிவும் எளிமையும் கொண்டுள்ளதென்றும் கூறி நூலின் சிறப்பான கூறுகளைத் தெளிவாக எடுத்துக்காட்டி என்னுடைய கடுமையான உழைப்பிற்கு வியந்து பாராட்டி வேங்கடவன் அருள் என்றுமே இருக்க வேண்டும் என்றும்